கிள்ளியூர் வட்டாரம், பாலூர் கிராமத்தில் வேளாண்மை துறை சார்பில் அட்மா திட்டத்தின் கீழ் உழவர் விழா இன்று 22-ம் தேதி நடந்தது. விவசாயிகள் ஆலோசனைஆலோசனைக் குழு தலைவர் கோபால் விவசாயிகளுக்கான விழிப்புணர்வு ஊர்வலத்தை தொடங்கிவைத்து மண் வளத்தை பாதுகாப்பதன் அவசியம் பற்றி பேசினார்.வேளாண்மைபேசினார். வேளாண்மை உதவி இயக்குனர் முரளி ராகிணி வேளாண்மை துறை சார்பாக செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் உயிர் உரங்களின் பயன்பாடு பற்றி விவசாயிகளுக்கு விளக்கினார். கலை மாமணி பழனியா பிள்ளைகலைமாமணி பழனியப்பிள்ளை குழுவினர் இயற்கை வேளாண்மையின் அவசியத்தினை கிராமிய கலைநிகழ்ச்சிகள் மூலம் விவசாயிகளுக்கு விளக்கினர். நிகழ்ச்சியில் உதவி வேளாண்மை அலுவலர் பபிதாபபிதா, அட்மா திட்ட அலுவலர் ஜோசப் ஆக்னல் உட்பட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.