கருங்கல் துண்டத்து விளைகிறிஸ்தவ ஆலயத்திலிருந்து புனித வெள்ளிமுன்னிட்டு ஆண்டுதோறும் இயேசுவின் சிலுவைப் பாடுகளின் 14 நிகழ்வுகளை நினைவுகூறும் வகையில் நடித்துக்காட்டியபடி கருணைமாதா மலைக்கு ஊர்வலம் வரச்செல்வது வழக்கம். அதன்படி நேற்று 45 ஆண்டுகளாக புனித வெள்ளியன்று திருச்சிலுவைப் பயணம் நடைபெற்றது. காலையில் ஆலயத்திலிருந்து புறப்பட்ட இந்தப் பவனியில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். பின்னர் ஊர்வலமாகச் சென்று மலை உச்சியில் உள்ள தியானமண்டபம் சென்று அங்கு இயேசுகிறிஸ்துவை கொல்லப்படும் காட்சியை நடித்துக்காட்டி நிகழ்ச்சி நிறைவுபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்குப்பணியாளர்கள், அருள்சகோதரிகள், ஊர்ப்பொதுமக்கள், அரசியல் பிரமுகர்கள், ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.