ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையில் ஆம் ஆத்மி, பாஜக எம்எல்ஏக்கள் கைகலப்பு

0
153

ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையில் நேற்று ஆம் ஆத்மி கட்சியின் ஒரே எம்எல்ஏவான மெஹ்ராஜ் மாலிக் பேசும்போது, “இந்துக்கள் திலகம் அணிகின்றனர். ஆனால் எப்போதும் பாவம் செய்கின்றனர்” என்றார்.

இதற்கு பாஜக எம்எல்ஏக்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். இதையடுத்து மெஹ்ராஜ் மாலிக் – பாஜக எம்எல்ஏக்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவைக் காவலர்கள் மூலம் இவர்கள் வெளியேற்றப்பட்டனர்.

காஷ்மீர் சட்டப்பேரவையில் நேற்று 3-வது நாளாக அமளி ஏற்பட்டது. வக்பு சட்டம் குறித்து விவாதிக்க வேண்டும் என ஆளும் தேசிய மாநாடு கட்சி எம்எல்ஏக்கள் கோரினர். ஆனால் இதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்ததை தொடர்ந்து அவர்கள் அவையின் மையப் பகுதிக்கு வந்து கோஷமிட்டனர். இதனால் அவை ஒத்தி வைக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here