பள்ளியாடி: பட்டதாரி வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

0
304

தக்கலை அருகே பள்ளியாடி பகுதியை சேர்ந்தவர் அசோகன் மகன் ஸ்ரீராம் (23) எம்பிஏ பட்டதாரி. படிப்பு முடிந்ததும் பல நிறுவனங்களில் சென்று வேலை கேட்டார். ஆனால் தகுதிக்கேற்றவாறு அவருக்கு வேலை கிடைக்கவில்லை. இதனால் கடந்த சில நாட்களாக மிகுந்த மனவருத்தத்தில் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு வழக்கம்போல் சாப்பிட்டுவிட்டு மாடியில் உள்ள தனது அறைக்கு உறங்க சென்றார். இன்று காலை நீண்ட நேரமாகியும் ஸ்ரீராம் கீழே வரவில்லை. இதை அடுத்து அசோகன் மாடிக்கு சென்று கதவை தட்டினபோது, கதவு உள்புறமாக பூட்டப்பட்டிருந்தது. 

இதை அடுத்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அறைக்கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, ஸ்ரீராம் தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். உடனடியாக அவரை மீட்டு தக்கலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஸ்ரீராம் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பான புகார் மேல் தக்கலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here