குளச்சல் பயணியர் விடுதி சந்திப்பில் பொதுமக்களுக்கு இடையூறாக அமைந்திருக்கும் டாஸ்மாக் மதுக்கடையை அகற்ற கோரி குளச்சல் சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் சார்பாக குளச்சல் பஸ் நிலையம் அருகில் உள்ள காமராஜர் சிலை முன்பு நேற்று (ஏப்ரல் 4) கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
குமரி கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் டைசன் மற்றும் திங்கள்நகர் பேரூராட்சி தலைவர் சுமன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். குளச்சல் சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜேக்கப் முன்னிலை வகித்தார். குளச்சல் சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜேக்கப் வரவேற்புரை ஆற்றினார்.
தமிழ்நாடு காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் லாரன்ஸ் மதுக்கடையினால் சராசரி மக்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள், இடைஞ்சல்கள் பற்றியும், மதுக்கடையினால் ஏற்படும் சுகாதார சீர்கேடுகள் பற்றியும் கண்டன உரையாற்றினார். இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பேச்சாளர் ஆதிஷா எழுச்சியுரை ஆற்றினார். மேலும் பலர் கலந்து கொண்டனர்.