மண்டைக்காடு: ஆன்மீக புத்தக நிலையம் திறந்த முதல்வர்

0
221

தமிழகத்தில் 100 கோவில்களில் இந்து அறநிலையத்துறை சார்பில் அமைக்கப்பட்ட ஆன்மீக புத்தக நிலையத்தை நேற்று தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளி மூலம் திறந்து வைத்தார். இதில் குமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் புத்தக நிலையம் திறக்கப்பட்டது. 

விழாவில் கன்னியாகுமரி மாவட்ட திருக்கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் ராஜேஷ் தலைமை வகித்தார். அறங்காவலர் குழு உறுப்பினர் சுந்தரி மற்றும் மண்டைக்காடு ஊராட்சி தலைவர் ராணி ஜெயந்தி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினர். அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ஜோதிஷ்குமார் மற்றும் துளசிதரன் ஆகியோர் முதல் விற்பனையை துவக்கி வைத்தனர். மண்டைக்காடு கோவில் பெரிய சக்கர தீவட்டி முன்னேற்ற சங்க தலைவர் புத்தகத்தை பெற்றுக்கொண்டார். 

நிகழ்ச்சியில் தேவசம் மராமத்து பொறியாளர் ஐயப்பன், கோவில் மேலாளர் செந்தில் குமார், குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் பி எஸ் பி சந்திரா மற்றும் திமுக உறுப்பினர்கள், பக்தர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here