திருவட்டார்: தொழிலாளியை வெட்டிவருக்கு 3 ஆண்டு சிறை

0
319

திருவட்டாறு அருகே உள்ள குட்டைக்குழி பகுதியை சேர்ந்தவர் கபிரியேல் (65). கூலி தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் குமார் என்ற விஜயகுமார் (50) இவரும் தொழிலாளி. இவர்களிடையே ரப்பர் மரக்கிளை வெட்டியது தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது. இந்த நிலையில் கடந்த 10-06-2023-ல் குமார் என்ற விஜயகுமார் கபிரியேலை அறிவாளால் வெட்டியதுடன், கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இந்த சம்பவத்தால் கபிரியேலின் காது துண்டானதுடன் கழுத்து, கை உட்பட உடலில் பலத்த காயம் ஏற்பட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார். 

இது தொடர்பான புகாரின் பேரில் குமார் என்ற விஜயகுமார் மீது திருவட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து வழக்கு விசாரணை பத்மநாபபுரம் நடுவர் நீதிமன்றம் எண்-2-ல் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதித்துறை நடுவர் பிரவீன் ஜீவா குமார் என்ற விஜயகுமாருக்கு 3 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் அரசு உதவி வழக்கறிஞர் ரேவதி ஆஜரானார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here