திருவட்டார்: சாலையில் குவித்த டயர் கழிவுகள்

0
128

திருவட்டார் அருகே அம்பாங்காலை பகுதியில் இருந்து ஆறங்கோடு என்ற பகுதிக்கு சாலை ஒன்று செல்கிறது. நேற்று அதிகாலை இந்த சாலையில் டயர் கழிவுகள் அதிக அளவில் கொட்டப்பட்ட நிலையில் காணப்பட்டது. அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். 

இது குறித்து பொதுமக்கள் திருவட்டார் பேரூராட்சி அலுவலகத்தில் புகார் செய்தனர். இதை அடுத்து பேரூராட்சி ஊழியர்கள் இதை அகற்றுவதற்காக நேற்று மதியம் வந்தனர். அப்போது அந்த பகுதி பொதுமக்கள் டயர் கழிவுகளை கொண்டு வந்து கொட்டியவர்களை கண்டுபிடிக்க வேண்டும் என்று பேரூராட்சி ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்டனர். இதை அடுத்து போலீசாரின் உதவியுடன் அப்பகுதி வீடுகளில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை சோதனை செய்த போது, திருவட்டார் பகுதியை சேர்ந்த ஒரு மினி டெம்போ மூலம் டயர் கழிவுகள் கொண்டு வரப்பட்டது தெரியவந்தது. இதை தொடர்ந்து இதை கொட்டியவர்களை அழைத்து வந்து அவர்களே அதை திரும்ப எடுத்துச் சென்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here