தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் அலுவலகம் மற்றும் மதுபான ஆலைகளில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் சுமார் 1000 கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாக அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில் டாஸ்மாக் முறைகேடை கண்டித்து இன்று பாஜக நடத்தும் போராட்டத்திற்கு சென்ற அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை இன்று கைது செய்யப்பட்டார்.
இதனைக் கண்டிக்கும் விதமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர் அனைவரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.