நாகர்கோவிலில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

0
189

குமரி மாவட்ட அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் பி.எம்.எஸ். தொழிற்சங்கம் சார்பில் நேற்று (மார்ச் 14) கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. தனியார் முதலாளிகளுக்கு பஸ்களை இயக்க அனுமதி வழங்குவதை கைவிட வேண்டும், போக்குவரத்து கழகங்களுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் வகையில் தனியார் மினி பஸ்கள் இயக்கும் தூரத்தை 25 கி.மீ ஆக அதிகப்படுத்துவதை கைவிட வேண்டும்.

போக்குவரத்து கழகங்களில் 25,000 நிரந்தர பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் அவற்றை நிரப்புவது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க தலைவர் ஜெயபாலன் தலைமையில் ஏராளமானோர் பங்கேற்று கோஷங்களை எழுப்பினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here