போலி சமூக வலைதள கணக்குகள்: ரசிகர்களுக்கு கயாடு லோஹர் எச்சரிக்கை 

0
134

பிரதீப் ரங்கநாதனின் ‘டிராகன்’ படம் மூலம் கவனிக்கப்பட்டவர், அதில் நாயகியாக நடித்த கயாடு லோஹர். அடுத்து ‘இதயம் முரளி’ படத்தில் அதர்வா ஜோடியாக நடித்துள்ளார். தெலுங்கிலும் சில படங்களில் நடித்து வரும் அவர் தனது பெயரில் எக்ஸ் தளத்தில் போலியாகப் பல கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதாக எச்சரிக்கை செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளப்பக்கத்தில், “இது மட்டுமே என்னுடைய கணக்கு. இது தவிர வேறு கணக்கு இல்லை. மற்றவை போலிகள். அதில் வெளியாகும் செய்திகள் எதையும் ரசிகர்கள் நம்ப வேண்டாம். நான் இந்த அதிகாரப்பூர்வ கணக்கின் மூலமாகச் சரியான நேரத்தில் சரியான தகவல் களைப் பகிர்ந்து கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here