‘குலாபி’ படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் மாறி இருக்கிறார் ‘தசரா’ இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடிலா.
‘தசரா’ படத்தின் பிரம்மாண்ட வெற்றியால் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக மாறினார் ஸ்ரீகாந்த் ஓடிலா. அதனைத் தொடர்ந்து மீண்டும் நானியுடன் இணைந்து ‘தி பாரடைஸ்’ படத்தை உருவாக்க இருக்கிறார். இதன் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட இதன் அறிமுக டீசருக்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்தது.
தற்போது ஸ்ரீகாந்த் ஓடிலா தயாரிப்பாளராகவும் மாறி இருக்கிறார். ‘குலாபி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை அனுராக் ரெட்டி மற்றும் சரத் சந்திரா ஆகியோருடன் இணைந்து தயாரிக்கவுள்ளார். இதில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பதை படக்குழுவினர் இன்னும் அறிவிக்கவில்லை.
‘குலாபி’ படத்தை சேத்தன் பந்தி இயக்கவுள்ளார். 2009-ம் ஆண்டு கோதாவரிகானி இடத்தில் நடைபெற்ற உண்மைச் சம்பவங்களை மையமாக வைத்து இக்கதை உருவாக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.














