இந்திப் படங்களில் நடித்து வரும் நர்கிஸ் ஃபக்ரி, அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தவர். இந்தியில் ‘மெட்ராஸ் கபே’, ‘ராக் ஸ்டார்’, ‘ஹவுஸ்புல்-3’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் பிரஷாந்துடன் ‘சாகசம்’ என்ற படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருந்தார். இவர் காஷ்மீரில் பிறந்த அமெரிக்கத் தொழிலதிபர் டோனி என்பவரை கடந்த சில வருடங்களாகக் காதலித்து வந்தார். இந்நிலையில் இவர்கள் திருமணம் செய்துகொண்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த இத்திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். சில மாதங்களுக்கு முன் அவர் அளித்த பேட்டியில் தனது வாழ்க்கையில் ஒருவர் புதிதாக வந்திருப்பதாகவும் தான் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தெரிவித்த நர்கிஸ், அவர் பற்றிய விவரத்தைச் சொல்ல மறுத்திருந்தார்.
Latest article
நாகர்கோவிலில் மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், முகம்மது ரபீக் மைதீன் என்பவருக்கு சொந்தமான மோட்டார் சைக்கிள் திருடு போனது. இதுகுறித்து கோட்டார் போலீஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீசார் நெல்லையைச் சேர்ந்த சபரி (22)...
குமரி: கடற்கரைப் பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்
கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் கடற்கரைப் பகுதியில் ஆமைகள் முட்டையிடும் சூழலைக் கருத்தில் கொண்டு, நேற்று கடற்கரையில் தேங்கியிருந்த சுமார் 300 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை வனத்துறையினரும் ஐயப்பா மகளிர் கல்லூரி மாணவிகளும் இணைந்து...
மண்டைக்காடு: கோயிலில் இன்று நள்ளிரவு வலிய படுக்கை பூஜை
கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசி கொடை, பங்குனி பரணி நட்சத்திரம், கார்த்திகை கடைசி வெள்ளிக்கிழமை என ஆண்டுக்கு மூன்று முறை நடைபெறும் வலிய படுக்கை என்னும் மகா பூஜை...








