இனயம் புத்தன்துறை ஊராட்சியில் உள்ள அலுவலகத்தில் 2024-ஆம் ஆண்டு டிசம்பர் முதல் வாரத்தில் முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு முகாம் நடைபெற்றது. அன்றைய தினம் சுமார் 500-க்கு அதிகமான மீனவர்கள் புகைபடத்துடன் விண்ணப்பங்களையும். அதற்கான ஆவணங்களையும் கொடுத்தனர். அதனை துறை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் பெற்றுக்கொண்டு அடுத்த நாள் காப்பீட்டிற்கான உரிமை அட்டை வழங்கப்படும் என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டனர்.
ஆனால் தற்போது இரண்டரை மாதமாகியும் இதுவரை காப்பீடு சம்மமந்தமாக எதுவும் வழங்கவில்லை. மேற்படி முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு அட்டையை மேற்படி இனயம் புத்தன்துறை ஊராட்சி மீனவ மக்களுக்கு உடனடியாக முகாமிட்டு வழங்க வேண்டி, நேற்று 19-ம் தேதி மாலை இனயம் புத்தன்துறை ஊராட்சி காங்கிரஸ் தலைவர் ஸ்டாலின், தமிழ்நாடு மீனவர் காங்கிரஸ் மாநில தலைவர் முனைவர் ஜோர்தான் முன்னிலையில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சி தலைவரிடம் மனு வழங்கினார்.