தக்கலை: பெண்ணுக்கு கொலை மிரட்டல்; பாஸ்டர் மீது வழக்கு

0
286

தக்கலை அருகே உள்ள கோழிப்போர் விளை பகுதியை சேர்ந்தவர் சாமுவேல் மனைவி கில்டா விஜயகுமாரி (53). இவருக்கு சொந்தமான நிலம் திருநெல்வேலி பகுதியில் உள்ளது. இதை விற்பனை செய்ய திட்டமிட்டிருந்தார். இந்த நிலையில் மேக்காமண்டபம் காஞ்சிரத்து கோணம் பகுதியை சேர்ந்த பெர்ஜின் (45) என்பவர் தான் கொடுக்கும் பணத்திற்கு அந்த நிலத்தை தர வேண்டும் என கூறி கில்டா விஜயகுமாரியிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று வீடு புகுந்து அவரை மிரட்டி, வீட்டு ஜன்னல் கண்ணாடிகளையும் உடைத்து சேதப்படுத்தியுள்ளார். இது குறித்து கில்டா விஜயகுமாரி தக்கலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி பெர்ஜின் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில் பெர்ஜின் பாஸ்டராக உள்ளார். இவர் மீது ஏற்கனவே சில வழக்குகள் உள்ளன. கொற்றிக்கோடு காவல் நிலையத்தில் சரித்திர பதிவேடு பட்டியலிலும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here