திற்பரப்பு: சாலைகள் சீரமைக்க கேட்டு பாஜக ஆர்ப்பாட்டம்

0
198

திற்பரப்பு ஊராட்சி அலுவலகம் முன்பாக பாரதிய ஜனதா சார்பில் நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. குமரியில் சிவாலயம் ஓட்டம் வருகிற 25-ம் தேதி தொடங்குகிறது. இந்த ஓட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்வது விழாவின் சிறப்பாகும். பன்னிரண்டு சிவாலயங்களில் திற்பரப்பு மற்றும் திருநந்திக்கரை கோவில்கள் திற்பரப்பு ஊராட்சி பகுதியில் அமைந்துள்ளது. சிவாலய பக்தர்கள் செல்லும் சாலைகள் சீரமைக்கப்படாமல் உள்ளதாகவும் மேலும் பிணந்தோடு பகுதியில் செயல்படும் பன்றி பண்ணைக்கு ஊராட்சி நிர்வாகம் ஆதரவாக செயல்படுவதாகவும் குற்றம் சாட்டி பாரதிய ஜனதாவினர் நேற்று மாலை ஊராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருவட்டார் வடக்கு ஒன்றிய தலைவர் விஜய் ராஜ் தலைமை வகித்தார். மாநில செயலாளர் மீனாதேவ் உட்பட மாவட்ட பொறுப்பாளர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here