காந்தி, நேரு பற்றிய புத்தகம் விற்பதால் உத்தராகண்ட்டில் புத்தக கண்காட்சிக்கு எதிர்ப்பா?

0
155

உத்தராகண்ட்டில் ‘கிரியேட்டிவ் உத்தராகண்ட்’ என்ற அமைப்பு ஆண்டுதோறும் புத்தக கண்காட்சி நடத்தி வருகிறது. இந்த புத்தக கண்காட்சியை டேராடூனில் உள்ள அரசு பள்ளி, ராம்லீலா மைதானம், எச்என்பி கர்வால் மத்திய பல்கலைக்கழகம் ஆகிய இடங்களில் நடத்த கடந்த 2 மாதங்களாக முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

முதலில் அனுமதி அளித்தவர்கள் பிறகு காரணம் கூறாமல் அனுமதியை ரத்து செய்தனர். இது குறித்து புத்தக கண்காட்சி ஒருங்கிணைப்பாளர் ஹேம் பந்த் கூறுகையில், ‘‘அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) அமைப்பின் பிரதிநிதிகள் எங்களிடம் காந்தி மற்றும் நேரு பற்றிய புத்தகங்கள் விற்பனைக்கு தகுதியற்றவை என கூறினர். புத்தக கண்காட்சிக்கான அனுமதியை ரத்து செய்யும்படி அவர்கள் அனைவருக்கும் அழுத்தம் கொடுக்கின்றனர்’’ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here