கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழி பகுதியை சேர்ந்தவர் லியோன். அரசு பஸ் கண்டக்டர். இவர் நேற்று முன்தினம் ( டிசம்பர் 31) நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து கடியப்பட்டணத்திற்கு கண்டக்டராக பஸ்ஸில் செல்லும் போது, ஜஸ்டின் என்பவர் டிக்கெட் எடுக்காமல் இருந்ததை கேட்ட நிலையில் லியோனை அவர் தாக்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கோட்டாறு போலீசார் வழக்கு பதிவு செய்து ஜஸ்டினை கைது செய்தனர்.














