குளச்சல் அருகே குழந்தை இயேசு காலனியை சேர்ந்தவர் அலெக்சாண்டர் மனைவி சகாயரெஜி (49). இவர் மகளிர் சுய உதவிக் குழுவிடம் இருந்து ரூ. 45 ஆயிரம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. கடந்த இரண்டு மாதங்களாக சகாயரெஜி கடனுக்கான தொகையை அடைக்கவில்லை என தெரிகிறது. இதற்கு இடையே அதே பகுதியை சேர்ந்த சுகன்யா (45), ரெஜிசா, செல்வம் ஆகியோர் சகாயரெஜியின் வீட்டுக்கு சென்று கடனை அடைக்க கூறியுள்ளனர். அப்போது சகாயரெஜிக்கும் அவர்களுக்கும் இடையே கராறு ஏற்பட்டு கைகலப்பானது.
இதில் படுகாயம் அடைந்த சகாயரெஜி குளச்சல் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இது குறித்து சகாயரெஜி மற்றும் சுகன்யா ஆகியோர் தனித்தனியாக குளச்சல் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் இருதரப்பினரையும் சேர்ந்த 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.














