கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே வட்டவிளை ஊர் தலைவராக இருந்த சிவ கிருஷ்ணன் தேவி முத்தாரம்மன் கோவிலுக்கு சொந்தமான 1 கோடி ரூபாயையும், 25 பவுன் நகையும் புதிய ஊர் கமிட்டியிடம் ஒப்படைக்க RDO உத்தரவிட்டும் இதுவரை ஒப்படைக்காமல் இருந்து வருவதாக கூறப்படுகின்றது. இதையடுத்து, புதிய நிர்வாகிகள் மற்றும் பெண்கள் முன்னாள் ஊர் தலைவரின் வீட்டை நேற்று (டிசம்பர் 6) முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது.














