முன்னாள் சிலி அதிபர் பேச்லெட்டுக்கு இந்திரா காந்தி அமைதி பரிசு அறிவிப்பு

0
226

இந்திரா காந்தி அமைதிப் பரிசுக்கு முன்னாள் சிலி நாட்டின் அதிபர் மைக்கேல் பேச்லெட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

டெல்லியில் உள்ள இந்திரா காந்தி நினைவு அறக்கட்டளை நேற்று இதை அறிவித்துள்ளாது. முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகரும், முன்னாள் வெளியுறவுத்துறை செயலருமான சிவசங்கர் மேனன் தலைமையிலான குழு, விருதுக்குரிய நபரின் பெயரை தேர்வு செய்து அறிவித்துள்ளது.

மனித உரிமை, அமைதி, சமத்துவம் ஆகிய துறைகளில் முன்னாள் சில அதிபர் மைக்கேல் பேச்லெட் ஆற்றிய பங்களிப்புக்காக இந்த விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் ஐ.நா. சபையின் முதல் பெண் இயக்குநர், மனித உரிமைகளுக்கான ஐ.நா. சபையின் உயர் தூதர், சிலி நாட்டின் அதிபராக 2 முறை பணியாற்றியது போன்ற பணிகளுக்காகவும் அவர் இந்த விருதைப் பெறுகிறார்.

ரூ.25 லட்சம் ரொக்கம், பாராட்டுப்பத்திரம் ஆகியவை அடங்கியது இந்த விருது. 1986-ம் ஆண்டு முதல் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பெயரால் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here