திருவட்டாறு அருகே திருவரம்பு பகுதியை சேர்ந்தவர் சேகர் என்பவர் மகன் விபின் (27). இவர் பிஎஸ்சி நர்சிங் முடித்துவிட்டு களியக்காவிளையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வந்தார். விபினுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. மேலும் அவருக்கு குடிப்பழக்கம் உள்ளதாகவும், அடிக்கடி வயிற்று வலியால் பாதிக்கப்பட்டு மருந்து மாத்திரைகள் சாப்பிட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று (4-ம் தேதி) வீட்டில் யாரும் இல்லாத போது விபின் மின்விசிறியில் தூக்குப்போட்டுக் கொண்டார். இதைப் பார்த்த குடும்பத்தினர் அவரை மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் விபின் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் திருவட்டாறு போலீசார் வழக்குப் பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Latest article
தெருவில் யாசகம் பெற்று வாழும் ஹாலிவுட் நடிகர் – ரசிகர்கள் அதிர்ச்சி
அமெரிக்காவில் கடந்த 2004-முதல் 2007-ம் ஆண்டு வரை மூன்று சீசன்களாக வெளியான சின்னத்திரை தொடர், ‘நெட்’ஸ்டிகிளாசிஃபைட் ஸ்கூல் சர்வைவல் கைடு’.
இதில் மார்ட்டின் என்ற கேரக்டரில் நடித்து ரசிகர்களின் அன்பைப் பெற்றவர் டெய்லர் சேஸ்....
1980-ல் நடக்கும் கதையில் விஜய் தேவரகொண்டா, கீர்த்தி சுரேஷ்
விஜய் தேவரகொண்டா நடிக்கும் புதிய படத்துக்கு ‘ரவுடி ஜனார்த்தனா’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இதில் நாயகியாகக் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ரவி கிரண் கோலா இயக்கும் இந்தப் படத்தை, ஸ்ரீவெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில்...
‘சிங்கிள் பசங்க’ டைட்டிலை வென்றார் கூமாபட்டி தங்க பாண்டி!
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி ‘சிங்கிள் பசங்க’. சிங்கிளாக இருக்கும் யூடியூப் பிரபலங்கள், சின்னத்திரை பிரபலங்களுடன் இணைந்து பங்கேற்கும் இந்த நிகழ்ச்சி, ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப்பெற்று வருகிறது.
டி.ராஜேந்தர், கனிகா...








