கருங்கல் வெள்ளியாவிளையில் உள்ள ஒரு குளத்தின் கரையோரத்தில் இன்று (4-ம் தேதி) காலை 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சுற்றித்திரிந்தார். அந்த பெண்ணிடம் விசாரித்த போது அவரது ஊர் பெயரை சொல்ல தெரியவில்லை. ஆனால் அவரது பெயர், சகோதரி, சகோதரி கணவர் உள்ளிட்டோரின் பெயர்களை மட்டும் கூறினார். இதையடுத்து மத்திகோடு ஊராட்சி துணைத் தலைவர் ஜெனோ என்பவரிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர். உடனடியாக கருங்கல் போலீசாருக்கு அவர் தகவல் தெரிவித்தார். போலீசார் விசாரித்ததில் அந்தப் பெண் கருங்கல் அருகே உள்ள இலவுவிளை பகுதியை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. இதையடுத்து உறவினர்களிடம் இன்று ஒப்படைத்தனர்.














