நாகர்கோவில் ராமன்புதூர் தளவாய்புரத்தைச் சேர்ந்தவர் ராஜம் (வயது 62). இவர் தனது வீட்டில் வாத்துக்களை வளர்த்து வருகிறார். இந்த வாத்துக்கள் அடிக்கடி பக்கத்து வீட்டான தொழிலாளி ஜார்ஜ் சுபாஷ்ராஜ் (41) என்பவர் வசிக்கும் வீட்டுக்குச் சென்று விடுமாம். ஆனால் வாத்துக்கள் வருவது அவருக்குப் பிடிக்கவில்லை.
இதனால் ராஜத்தை அவர் கண்டித்துள்ளார். இதனால் 2 பேருக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டது. இந்த நிலையில் சம்பவத்தன்று ராஜம் வீட்டில் இருந்தபோது ஜார்ஜ் சுபாஷ்ராஜ் அங்கு சென்று தகாத வார்த்தைகளைப் பேசி ராஜத்தைத் தாக்கினார்.
இதுகுறித்து ஆசாரிபள்ளம் போலீஸ் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜார்ஜ் சுபாஷ்ராஜை கைது செய்தனர்.














