குளச்சலை அடுத்த மண்டைக்காடு புதூர் பகுதியைச் சேர்ந்தவர் அமல்ராஜ் மனைவி சாய்தா (45) அந்தப் பகுதி மகளிர் சுய உதவிக் குழுவின் தலைவியாக உள்ளார். நேற்று முன்தினம் இரவு சுமார் 8:30 மணி அளவில் சாய்தா அந்தப் பகுதியில் உள்ள தோழி ஒருவரைச் சந்திப்பதற்காக நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது பின்னால் வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென சாய்தாவைத் தள்ளி அவரது கண்ணில் மண்ணைத் தூவியுள்ளார். இதில் கீழே விழுந்த சாய்தாவின் கழுத்தில் கிடந்த 10 பவுன் தங்கச் சங்கிலியைப் பார்த்துவிட்டு அந்த நபர் தப்பி ஓடினார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் அந்த நபர் மாயமானார். புகாரின் பேரில் குளச்சல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.