புதுக்கடை அருகே மேலங்கலம் பகுதி வட்டவிளையை சேர்ந்தவர் நாடான்கண்ணு மகன் கோபி ராஜன் (54). கூலித் தொழிலாளியான இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. தனியாக வசித்து வந்தார். உடல் நிலை பாதிப்பு காரணமாக மன வருத்தத்தில் இருந்தார்.
நேற்று முன்தினம் இரவு இவர் வீட்டிற்கு செல்லவில்லை. நேற்று (16-ம் தேதி) காலையில் அந்த பகுதி நெடுமானி குளக்கரை பகுதியில் உள்ள பயணிகள் நிழலகத்தில் விஷம் குடித்து இறந்த நிலையில் கிடந்துள்ளார். இது தொடர்பாக அவர் சகோதரி கலா என்பவர் புதுக்கடை போலீசில் புகார் செய்தார். போலீசார் உடலை மீட்டு குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.