எங்காவது ஓரிடத்தில் நிறுத்தித்தானே ஆகவேண்டும்: அரசியலில் ஓய்வு குறித்து சரத் பவார் சூசகம்

0
271

இனி வரும் காலங்களில் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்றும், எங்காவது ஓரிடத்தில் நிறுத்தித்தானே ஆகவேண்டும் எனவும் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் (83) சூசகமாக தெரிவித்துள்ளார்.

அவரது மாநிலங்களவை உறுப்பினர் பதவிக் காலம் முடிய இன்னும் 18 மாதங்கள் இருக்கும் நிலையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் மிக மூத்த அரசியல்வாதியான சரத் பவார் கடந்த 1999-ம் ஆண்டு தேசியவாத காங்கிரஸ் கட்சியை தோற்றுவித்தார். மகாராஷ்டிர அரசியலில் நீண்ட அரசியல் அனுபவத்தை கொண்டவர் அவர். மேற்கு மகாராஷ்டிராவில் உள்ள பாரமதி சரத்பவாரின் குடும்பத்துக்கு மிகவும் நெருக்கமான தொகுதியாகும். பாரமதி மக்கள் சரத்பவாரின் மீது கொண்டுள்ள அன்பின் காரணமாக அவரை எம்பி, எம்எல்ஏ என இந்த தொகுதியிலிருந்து 14 முறை தேர்வு செய்துள்ளனர்.

இந்த நிலையில், சரத் பவார் கூறுகையில், “ நான் ஆட்சி அதிகாரத்தில் இல்லை. என்னுடைய மாநிலங்களை உறுப்பினரின் பதவிக்காலம் ஒன்றரை ஆண்டுகள் எஞ்சியுள்ளது. இனி வரும் தேர்தல் எதிலும் நான் போட்டியிடப்போவதில்லை. எந்த இடத்திலாவது நான் நிறுத்தித்தானே ஆக வேண்டும். என்னை தொடர்ந்து எம்.பி. எம்எல்ஏ-வாக தேர்வு செய்த பாரமதி வாக்காளர்களுக்கு நன்றி ” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here