Home தேசிய செய்திகள் கீழமை நீதிமன்றங்களில் 11 மாதங்களில் நிலுவை வழக்குகள் 9.22 லட்சம் உயர்வு

கீழமை நீதிமன்றங்களில் 11 மாதங்களில் நிலுவை வழக்குகள் 9.22 லட்சம் உயர்வு

0

கடந்த 11 மாதங்களில் மாவட்ட மற்றும் துணை நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 9.22 லட்சம் உயர்ந்துள்ளது.

இதுகுறித்து மக்களவையில் சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், “இந்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதி நிலவரப்படி கீழமை நீதிமன்றங்களில் 4.44 கோடிக்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் இருந்தன. கடந்த நவம்பர் 15-ம் தேதி நிலவரப்படி இந்த எண்ணிக்கை 4.53 கோடியாக உயர்ந்துள்ளது. அதாவது 11 மாதங்களில் 9.22 லட்சம் அதிகரித்துள்ளது. நிலுவையில் உள்ள 4.53 கோடி வழக்குகளில், சிவில் வழக்குகளின் எண்ணிக்கை 1.10 கோடியாகவும் குற்ற வழக்குகளின் எண்ணிக்கை 3.43 கோடியாகவும் உள்ளது” என்றார்.

மாநிலங்களவையில் அர்ஜுன் ராம் மேக்வால் அளித்த ஒரு பதிலில், “நாடு முழுவதும் மாவட்ட மற்றும் துணை நீதிமன்றங்களில் 5,245 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன” என்றார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version