தீபாவளி, சாத் பூஜைக்கு 7000 சிறப்பு ரயில்கள்

0
192

தீபாவளி மற்றும் சாத் பூஜையை முன்னிட்டு நாடு முழுவதும் 7 ஆயிரம் சிறப்பு ரயில்களை இந்தியன் ரயில்வேஸ் இயக்க உள்ளது.

இதுகுறித்து ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறுகைையில், “ இந்த ஆண்டு தீபாவளி மற்றும் சாத் பூஜையை முன்னிட்டு தினமும் கூடுதலாக 2 லட்சம் பேர் பயணம் செய்யும் வகையில் 7,000 சிறப்பு ரயில்களை இந்தியன் ரயில்வே இயக்க உள்ளது” என்றார்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், “கடந்த ஆண்டு தீபாவளி மற்றும் சாத் பூஜையை முன்னிட்டு 4,500 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. இந்நிலையில் பயணிகள் அதிகரிப்பதை கருத்தில் கொண்டு, இந்த ஆண்டு சிறப்பு ரயில்களை அதிகரிக்க ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது” என்று தெரிவித்தனர்.

இந்த காலகட்டத்தில் நாட்டின் கிழக்குப் பகுதிகளுக்கு ஏராளமானோர் பயணம் செய்வதால் வடக்கு ரயில்வே கணிசமான எண்ணிக்கையில், அதாவது சுமார் 3,050 சிறப்பு ரயில்களை இயக்குவதாக தெரிவித்துள்ளது.

வடக்கு ரயில்வே கடந்த ஆண்டு 1,082 சிறப்பு ரயில்களை இயக்கியது. இது இந்த ஆண்டு 3,050 ஆக அதிகரித்துள்ளது. இது 181 சதவீதம் அதிகமாகும். சிறப்பு ரயில்கள் தவிர வழக்கமான ரயில்களில் கூடுதல் பெட்டிகளை இணைக்கவிருப்பதாகவும் வடக்கு ரயில்வே கூறியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here