விரிகோடு ரயில்வே கிராசிங்கில் அதிகாரிகள் மாற்று வழி பாதையில் ரயில்வே மேம்பாலம் அமைக்க நடவடிக்கை மேற்கொண்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று விரிகோடு சிஎஸ்ஐ சமுதாய நலக்கூடத்தில் பொதுமக்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பத்மநாபபுரம் சார் ஆட்சியர் வினய்குமார் மீனா மற்றும் விஜய்வசந்த் எம்பி, தாரகை கத்பட் எம்எல்ஏ மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள், பொதுமக்கள் விவாதித்தனர். பின்னர் பழைய வழியில் மேம்பாலம் அமைக்க தீர்வு காணப்பட்டது.














