Home கன்னியாகுமரி செய்திகள் நாகா்கோவில் அருகே வீட்டுக் கதவை உடைத்து 60 பவுன் நகைகள் திருட்டு

நாகா்கோவில் அருகே வீட்டுக் கதவை உடைத்து 60 பவுன் நகைகள் திருட்டு

0

நாகா்கோவில் அருகே வீட்டுக்கதவை உடைத்து 60 பவுன் நகைகள் திருட்டுப்போனது ஞாயிற்றுக்கிழமை காலை தெரியவந்தது.

நாகா்கோவிலை அடுத்த பள்ளம் அன்னை நகா் பகுதியைச் சோ்ந்தவா் சேவியா்ஷீலன். இவா், வெளிநாட்டில் பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி அமலா. இவா் சென்னையில் பணியாற்றி வரும் மகன், மகளைக் காண வீட்டை பூட்டிவிட்டு சென்னை சென்றிருந்தாா்.

இந்த நிலையில், வீட்டின் முன்புறக் கதவு உடைக்கப்பட்டிருப்பதை அருகில் வசித்தவா்கள் பாா்த்து அமலாவுக்கு கைப்பேசியில் தகவல் தெரிவித்தனா். தகவலறிந்த சுசீந்திரம் காவல் நிலைய போலீஸாா் நிகழ்விடத்துக்கு வந்து அமலாவின் வீட்டுக்குள் சென்று பாா்வையிட்டதில் பீரோவில் இருந்த 60 பவுன் தங்க நகைகள் திருடுபோனது தெரியவந்தது.

எனினும் அமலா வீடு திரும்பிய பிறகே திருட்டுபோன நகைகள், பணம் குறித்து முழுமையாகத் தெரியவரும் என்று காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version