Home தேசிய செய்திகள் உ.பி.யில் கார் தீப்பிடித்ததில் 6 நண்பர்கள் உயிரிழப்பு

உ.பி.யில் கார் தீப்பிடித்ததில் 6 நண்பர்கள் உயிரிழப்பு

0

உத்தர பிரதேசத்தில் அதிவேகமாக சென்ற கார் விபத்தில் சிக்கி தீப்பிடித்ததில் அதிலிருந்த 6 நண்பர்கள் உடல் கருகி உயிரிழந்தனர்.

ஹரியானா மாநிலம் ஹான்சி மாவட்டத்தைச் சேர்ந்த 6 நண்பர்கள், அமாவாசையை முன்னிட்டு கங்கை நதியில் புனித நீராடுவதற்காக திங்கள்கிழமை அதிகாலையில் ஹரித்வாருக்கு காரில் புறப்பட்டுள்ளனர். உத்தர பிரதேச மாநிலம் முசாபர்நகர் அருகே அதிவேகமாக சென்று கொண்டிருந்த அந்தக் கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்தில் மோதி, பின்னர் சாலை தடுப்பின் மீது மோதி தலைகீழாக கவிழ்ந்தது. இதனால் அந்தக் கார் தீப்பிடித்து எரிந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் காவல் துறையினரும் தீயணைப்புப் படையினரும் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும், அதற்குள் வாகனம் முழுமையாக எரிந்து நாசமானதுடன், உள்ளே இருந்த 6 பேரும் உயிரிழந்தனர். கடுமையாகக் கருகிய உடல்கள் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

பின்னர் கிரேன் உதவியுடன் காரின் இடிபாடுகள் அகற்றப்பட்டன. இந்த விபத்தால் நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இது தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் அந்தக் கார் மணிக்கு சுமார் 120 கி.மீ. வேகத்தில் சென்றது தெரியவந்துள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version