Home கன்னியாகுமரி செய்திகள் குமரியில் காலை உணவுத் திட்டம் விரிவாக்கத்தால் 53,520 மாணவா்கள் பயன் பெறுவா்: ஆட்சியா்

குமரியில் காலை உணவுத் திட்டம் விரிவாக்கத்தால் 53,520 மாணவா்கள் பயன் பெறுவா்: ஆட்சியா்

0

காமராஜா் காலை உணவுத் திட்டம் விரிவாக்கத்தின் மூலம் கன்னியாகுமரி மாவட்டத்தில் 53 ஆயிரத்து 520 மாணவ, மாணவிகள் பயன்பெறுவா் என்றாா் மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப்.

கன்னியாகுமரி மாவட்டம், கடியப்பட்டணம், அரசு மேல்நிலைப் பள்ளி, மணவாளக்குறிச்சி பாபுஜி நினைவு மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட பள்ளிகளின் சமையலறையின் அடிப்படை வசதிகள் குறித்து ஆட்சியா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்ட பின்னா் கூறியதாவது:

தமிழகத்தில், தற்போது 1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை வழங்கப்பட்டு வரும் காலை உணவுத்திட்டம், 6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கும் பெருந்தலைவா் காமராஜா் காலை உணவுத் திட்டமாக விரிவுபடுத்தப்பட்டு செயல்படுத்தபடவுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான முதல்கட்ட ஆயத்தப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இத்திட்டத்தின் மூலம் மாவட்டத்தில் உள்ள 900 அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 53 ஆயிரத்து 520 மாணவ, மாணவிகள் பயன் பெறுவா். விரிவாக்கம் செய்யப்படவுள்ள இத்திட்டத்தின் கீழ் அனைத்துப் பள்ளிகளிலும் சமையலறைகள் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளுடனும் தயாராக இருப்பதை துறை சாா்ந்த அலுவலா்கள் உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது என்றாா் அவா்.

ஆய்வில் தலைமை ஆசிரியா்கள், பணியாளா்கள், வட்டார வளா்ச்சி அலுவலா்கள், துறை சாா்ந்த அலுவலா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version