Home தேசிய செய்திகள் ஹார்முஸ் ஜலசந்தியில் 500 இந்திய மாலுமிகள் 107 நாட்களாக சிக்கி தவிப்பு – தமிழக மாலுமி...

ஹார்முஸ் ஜலசந்தியில் 500 இந்திய மாலுமிகள் 107 நாட்களாக சிக்கி தவிப்பு – தமிழக மாலுமி உயிரிழப்பு

0

அணு ஆயுத தயாரிப்புக்கு யுரேனியத்தை செறிவூட்டும் பணியில் ஈரான் ஈடுபட்டதால், அந்நாடு மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் கடந்த பிப்ரவரி 28-ம் தேதி தாக்குதல் நடத்தின.

அப்போது முதல் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால், வளைகுடா நாடுகளுக்கு எரிபொருள் எடுத்துவர சென்ற நூற்றுக்கணக்கான கப்பல்கள் கடந்த 107 நாட்களாக முடங்கி கிடக்கின்றன. இங்கு 13-க்கும் மேற்பட்ட இந்திய கப்பல்கள் சிக்கியுள்ளன. இங்குள்ள கப்பல்களில் 562 இந்திய மாலுமிகள் சிக்கி தவிக்கின்றனர்.

இந்நிலையில் ஓமன் நாட்டில் உள்ள டுக்ம் துறைமுகத்தில் நின்றிருந்த எம்டி செலஸ்டியல் என்ற கப்பலில் பணியாற்றிய தமிழக மாலுமி நிஷாந்த் உயிர்த்த

நாதன் உடல்நிலை பாதிக்கப் பட்டு முறையான சிகிச்சை கிடைக்காததால் இறந்தார். அவரது உடலை விரைவில் இந்தியா அனுப்புவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அமெரிக்கா- ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டால்தான், ஹார்முஸ் ஜல சந்தி திறக்கப்பட்டு அங்குள்ள கப்பல்கள் வெளியேறும் நிலை ஏற்படும்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version