கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுக்கும் நோக்கில் மாவட்ட காவல்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கடந்த 11 மாதங்களில் கஞ்சா விற்பனை தொடர்பாக 465 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக மதுவிலக்கு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். கஞ்சா விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் எச்சரித்துள்ளனர்.














