மியான்மரில் ராணுவம் குண்டு வீசியதில் 40 பேர் உயிரிழப்பு

0
23

 மியான்​மரில் மக்​களால் தேர்ந்​ தெடுக்​கப்​பட்ட ஆட்​சியை விரட்டி விட்​டு, கடந்த 2021-ம் ஆண்டு நாட்டை ராணுவம் கைப்​பற்​றியது. இதையடுத்து ராணுவத்தை எதிர்த்து கிளர்ச்சி​யாளர்​கள் போராட்​டம் நடத்தி வரு​கின்றனர். அவர்​களை ஒடுக்க ராணுவ​மும் தாக்​குதல் நடத்தி வரு​கிறது.

இந்​நிலை​யில், பவுர்​ணமியை முன்​னிட்டு கடந்த திங்​கட்​கிழமை மத்​திய மியான்​மரில் உள்ள சவுங் யூ நகரில் புத்த மதத்​தினர் ஏராள​மானோர் கூடி விழா கொண்​டாடினர். அப்​போது புத்த மதத்​தினர் கூடி​யிருந்த பகு​திகளில் ராணுவத்​தினர் பாராகிளைடர் மூலம் அடுத்​தடுத்து குண்​டு​களை வீசி தாக்​குதல் நடத்​தினர். இதில் குழந்​தைகள் உட்பட 40 பேர் உயி​ரிழந்​தனர். 80 பேர் படு​கா​யம் அடைந்​தனர்.

முன்​ன​தாக ராணுவத்​தினர் குண்டு வீசப் போகும் தகவல் கிடைத்​து ஏராள​மானோர் உயிர் பிழைத்​துள்​ளனர். மியான்​மர் ராணுவத்​தின் இந்த தாக்​குதலுக்கு சர்​வ​தேச அமைப்​பு​கள்​ கடும்​ கண்​டனம்​ தெரி​வித்​துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here