நடிகர் சுமன் கலந்து கொள்ளவிருந்த சிலை திறப்பு விழாவில் மின்சாரம் தாக்கி 4 பேர் உயிரிழப்பு

0
178

ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் பாபண்ண கவுட். 18-ம் நூற்றாண் டின் தொடக்கத்திலேயே இவர் ஆங்கிலேயர்களுக்கு எதிராக சுதந்திர போராட்டம் செய்து உயிர் தியாகம் செய்தவர். இவருக்கு சிலை வைக்க இரு கோஷ்டியின ரிடையே கடந்த 2 ஆண்டுகளாக மோதல் நடந்து வந்தது.

இந்நிலையில், கிழக்கு கோதா வரி மாவட்ட துணை ஆட்சிய ரான ராணி சுஷ்மிதா இரு கோஷ் டியினரை அழைத்து பேசி சுமுக தீர்வை கண்டார். இதற்கு இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டு, பாபண்ணாவுக்கு ஒரு பொது இடத் தில் சிலை வைக்க தீர்மானித்தனர். நேற்று அச்சிலையை நடிகர் சுமன் திறந்து வைக்கவிருந்தார்.

இதற்காக உண்ட்ராஜவரம் மண்டலம், தாட்டிவர்ரு கிராமத்தில் சிலை வைக்க ஏற்பாடுகள் நடந்து வந்தன. அக்கிராமத்தினர் ஞாயிற்றுக்கிழமை இரவு பேனர்கள் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மின்சார கம்பியில் பேனரில் இருந்த இரும்புகுழாய் உரசியதையடுத்து 5 பேர் தூக்கி வீசப்பட்டனர். இதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர். ஒருவர் படுகாயம் அடைந்தார். இறந்தவர்களின் குடும்பத்தா ருக்கு தலா ரூ. 5 லட்சம் நிதியுத வியை ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடு அறிவித்தார். சிலை திறப்பு விழா தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here