Home உலக செய்திகள் பிலிப்பைன்ஸ் நிலநடுக்கத்தில் சிக்கி 32 பேர் உயிரிழப்பு

பிலிப்பைன்ஸ் நிலநடுக்கத்தில் சிக்கி 32 பேர் உயிரிழப்பு

0

தெற்கு பிலிப்பைன்ஸில் நேற்று 7.8 ரிக்​டர் அளவி​லான சக்​தி​வாய்ந்த நிலநடுக்கம் ஏற்​பட்​ட​தில் 32 பேர் உயி​ரிழந்​தனர்.

தெற்கு பிலிப்​பைன்​ஸின் மிண்​ட​னாவோ பிராந்​தி​யத்​தில் நேற்று காலை 7:37 மணிக்கு சக்​தி​வாய்ந்த நிலநடுக்​கம் ஏற்​பட்​டது. 7.8 ரிக்​டர் அளவி​லான இந்த நிலநடுக்​கம் இந்த ஆண்டு பிலிப்​பைன்ஸை தாக்​கிய மிக வலு​வான நிலநடுக்​கம் என கூறப்படுகிறது.

இந்த நிலநடுக்​கம் பிலிப்​பைன்​ஸின் 2-வது அதிக மக்​கள் தொகை கொண்ட தீவான மிண்​டனாவோவுக்கு அப்​பால் கடலில் மையம் கொண்​டிருந்​த​தாக​வும் சரங்​கனி மாகாணத்​தில் உள்ள மாசிம் நகரத்​துக்கு தென்​மேற்கே சுமார் 32 கி.மீ. தொலை​வில், 33 கி.மீ. ஆழத்தில் ஏற்​பட்​ட​தாக​வும் தகவல்​கள் தெரிவிக்​கின்​றன.

நிலநடுக்​கத்தை தொடர்ந்து பல இடங்​களில் கட்​டிடங்​கள் இடிந்து விழுந்​தன. மலைப்​பாங்​கான இடங்​களில் நிலச்​சரிவு ஏற்​பட்​டது. இந்​தப் பேரிடரில் 32 பேர் உயி​ரிழந்​தனர். சுமார் 200 பேர் காயம் அடைந்​தனர். ஆயிரக்​கணக்​கான மக்​கள் இடம்​பெயர்ந்துள்ள நிலை​யில் பலரை காண​வில்​லை.

பிலிப்​பைன்​ஸில் 7 லட்​சத்​துக்​கும் அதிக மக்​கள் வாழும் துறை​முக நகரான ஜெனரல் சாண்​டோஸில் பல கட்​டிடங்​கள் இடிந்து விழுந்​தன. முக்​கிய உள்​கட்​டமைப்​பு​களும் சேதமடைந்​தன. இந்​நகரில் மட்​டும் 12 பேரை காண​வில்லை என கூறப்​படு​கிறது. இந்​நகரில் உள்ள சர்​வ​தேச விமான நிலை​யம் தற்​காலிக​மாக மூடப்​பட்​டது.

நிலநடுக்​கத்தை தொடர்ந்து பிலிப்​பைன்ஸ் அதிபர் பெர்​டி​னாண்ட் மார்​கோஸ் ஜூனியர் பள்​ளி, கல்​லூரி​களுக்கு விடு​முறை அறி​வித்​தார். நிலநடுக்​கத்​தால் பாதிக்​கப்​பட்ட மாகாணங்​களில் மீட்​புப் பணி​களை உடனடி​யாக தொடங்​கு​மாறு பேரிடர் மீட்பு அமைப்​பு​களுக்கு உத்​தர​விட்​டார்.

நிலநடுக்​கத்தை தொடர்ந்து சுனாமி எச்​சரிக்கை விடுக்​கப்​பட்​டது. எனினும், நிலநடுக்​கம் ஏற்​பட்டு சுமார் 5 மணி நேரத்​திற்கு பிறகு சுனாமி அச்​சுறுத்​தல் நீங்​கி​விட்​ட​தாக பசிபிக் சுனாமி எச்​சரிக்​கை மையம்​ தெரிவித்​தது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version