ரஷ்ய ராணுவ விமான விபத்தில் 30 பேர் உயிரிழப்பு

0
28

 ரஷ்ய ராணுவ விமானம் க்ரிமியா பகுதியில் நேற்று முன்தினம் இரவு விபத்துக் குள்ளானதில் அதில் பயணம் செய்த 30 பேர் உயிரிழந்தனர். ரஷ்ய ராணுவத்தில் உள்ள பழமையான போக்குவரத்து விமானம் ஏஎன்-26. சோவியத் ரஷ்யா காலத்தில் 1969-1985-ம்ஆண்டுகளுக்கு இடையே தயாரிக்கப்பட்டது. இந்த விமானத்தில் நேற்று முன்தினம் 7 ஊழியர்கள், 23 பயணிகள் என மொத்தம் 30 பேர் பயணம் செய்தனர்.

இந்த விமானம் ரஷ்யாவின் க்ரிமியா பகுதியில் உள்ள செவஸ்தோபோல் என்ற இடத்தின் அருகே நேற்று முன்தினம் இரவு விபத்துக்குள்ளானது. அதில் பயணம் செய்த 30 பேரும் உயிரிழந்தனர். தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த விமானம் விபத்தில் சிக்கியிருக்கலாம் எனவும், இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here