நாகர்கோவில் வடசேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குத்தாலிங்கம் தலைமையிலான போலீசார் நேற்று புத்தேரி புளியடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புளியடி நான்கு வழிச்சாலை அருகே கோணம் அருமநல்லூர் பகுதியை சேர்ந்த விணு (வயது 40), சுபின் (24), அனிஷ் (21) ஆகியோர் பணம் வைத்து சீட்டு விளையாடியது தெரிய வந்தது. இதையடுத்து சூதாடிய 3 பேரையும் போலீசார் கைது செய்து சீட்டு கட்டுகளை பறிமுதல் செய்தனர்.