மாலி நாட்டில் பணியாற்றிய 3 இந்தியர்கள் கடத்தல்: பத்திரமாக மீட்க மத்திய அரசு வலியுறுத்தல்

0
121

மாலி நாட்டில் பணியாற்றிய 3 இந்தியர்கள் கடத்தப்பட்டு உள்ளனர். அவர்களை பத்திரமாக மீட்க மாலி அரசிடம் மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது.

மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் ராணுவ ஆட்சி நடைபெறுகிறது. அந்த நாட்டில் ராணுவத்துக்கும் அல்காய்தா ஆதரவு தீவிரவாத அமைப்புகளுக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. மாலி நாட்டின் மத்திய, மேற்கு பகுதிகளில் உள்ள ராணுவ முகாம்களை குறிவைத்து அல்காய்தா ஆதரவு தீவிரவாதிகள் அண்மையில் தாக்குதல் நடத்தினர். அப்போது இருதரப்புக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்றது. இதில் 80 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ராணுவ தரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டது.

இந்த சூழலில் கடந்த 1-ம் தேதி மாலி​யின் கேய்ஸ் நகரில் உள்ள சிமென்ட் ஆலை மீது அல்காய்தா தீவிர​வா​தி​கள் திடீர் தாக்​குதல் நடத்​தினர். அங்கு பணி​யில் இருந்த தொழிலா​ளர்​களை தீவிர​வா​தி​கள் கடத்​திச் சென்று உள்​ளனர். இதில் 3 பேர் இந்​தி​யர்​கள்.

இதுகுறித்து மத்​திய வெளி​யுறவுத்துறை நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: கேய்ஸ் நகரில் சிமென்ட் ஆலை​யில் பணி​யாற்றிய 3 இந்​தி​யர்​களை, அல்​-​காய்தா ஆதரவு ஜேஎன்​ஐஎம் தீவிர​வா​தி​கள் கடத்​திச் சென்​றுள்​ளனர். அவர்​களை பத்​திர​மாக மீட்க மாலி அரசிடம் வலி​யுறுத்தி உள்​ளோம். மாலி​யில் உள்ள இந்​திய தூதரகம், அங்​குள்ள நிலை​மையை மிக​வும் உன்​னிப்​பாகக் கண்​காணித்து வரு​கிறது. மாலி​யில் தங்​கி​யிருக்​கும் இந்​தி​யர்​கள் பாது​காப்​பாக இருக்​கும்​படி அறி​வுறுத்தி உள்​ளோம். இவ்​வாறு அறிக்​கை​யில் தெரிவிக்​கப்​பட்டு உள்​ளது.

மாலி நாட்​டில் சுரங்​கம், மின்​சா​ரம், சிமென்ட், மருந்து உற்​பத்தி ஆலைகளில் சுமார் 400-க்​கும் மேற்​பட்ட இந்​தி​யர்​கள் பணி​யாற்றி வரு​கின்​றனர். ராணுவம் மற்​றும் தீவிர​வாத அமைப்​பு​களுக்கு இடையி​லான போர் தீவிரமடைந்து வரும் சூழலில் அவர்​களின் பாது​காப்பு கேள்விக் குறி​யாகி உள்​ளது.

தற்​போது மாலி​யில் கடத்​தப்​பட்ட 3 இந்​தி​யர்​களின் விவரங்​கள் வெளி​யிடப்​பட​வில்​லை. அவர்​கள் பிணைக்​கை​தி​களாக பிடித்து வைக்​கப்​பட்​டிருப்​ப​தாகக் கூறப்​படு​கிறது. சம்​பந்​தப்​பட்ட சிமென்ட் ஆலை நிர்​வாகம் சார்​பில் தீவிர​வாத குழுக்​களு​டன் திரைமறை​வில் பேச்​சு​வார்த்​தைகள் நடை​பெற்று வரு​கின்​றன. கடத்​தப்​பட்ட 3 இந்​தி​யர்​களின் குடும்​பத்​தினருடன் மத்​திய வெளி​யுறவுத்துறை தொடர்​பில் இருக்​கிறது. விரை​வில் 3 பேரும் பத்​திர​மாக மீட்​கப்​படு​வார்​கள் என்று வெளி​யுறவுத்​ துறை அதி​காரி​கள்​ தெரி​வித்​துள்​ளனர்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here