இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இலங்கை அணியில் கமில், அரச்சிகே சேர்ப்பு

0
23

இந்தியாவுக்கு எதிரான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டிக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான சஹான் அரச்சிகே, பேட்ஸ்மேன் கமில் மிஷாரா சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையே காலே மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 165 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. இதனால் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கொழும்பு நகரில் நாளை (23-ம் தேதி) தொடங்குகிறது. இந்த போட்டிக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சுழற்பந்து வீச்சு ஆல் ரவுண்டரான சஹான் அரச்சிகே, பேட்ஸ்மேன் கமில் மிஷாரா சேர்க்கப்பட்டுள்ளனர்.

ரமேஷ் மெண்டிஸுக்கு பதிலாக சஹான் அரச்சிகே அணிக்குள் கொண்டுவரப்பட்டுள்ளார். அரச்சிகே, இலங்கை அணிக்காக 5 ஒருநாள் போட்டி, ஒரு டி 20 ஆட்டத்தில் விளையாடி உள்ளார். கடந்த மாதம் இந்தியா ‘ஏ’ அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இலங்கை ‘ஏ’ அணியின் கேப்டனாக அரச்சிகே செயல்பட்டு இருந்தார். அவர், அந்தத் தொடரில் 209 ரன்கள் சேர்த்து கவனம் ஈர்த்து இருந்தார்.

டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான கமில் மிஷாரா, நிஷான் பெர்னாண்டோவுக்கு பதிலாக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். முதல் டெஸ்ட் போட்டியில் காயம் அடைந்த தினேஷ் சந்திமால் சேர்க்கப்படவில்லை. அவரது இடத்தில் பசிந்து சூரியபண்டரா தொடர்கிறார்.

இலங்கை அணி விவரம்: தனஞ்ஜெயா டி சில்வா (கேப்டன்), லகிரு உதரா, பசிந்து சூரியபண்டாரா, கமிந்து மெண்டிஸ், கமில் மிஷாரா, சோனல் தினுஷா, நிரோஷன் திக்வெல்லா, சஹான் அரச்சிகே, கேஷரா நுவந்தா, பிரபாத் ஜெயசூரியா, மிலன் ரத்னாயகே, லகிரு குமரா, அசிதா பெர்னாண்டோ, விஷ்வா பெர்னாண்டோ.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here