‘லப்பர் பந்து’ மூலம் 2-வது இன்னிங்ஸ்: சுவாசிகா விஜய் மகிழ்ச்சி

0
344

அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கிய படம், ‘லப்பர் பந்து’. இதில் ‘அட்டகத்தி’ தினேஷ், ஹரிஷ் கல்யாண், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி உட்பட பலர் நடித்துள்ளனர். பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் லக்ஷ்மன் குமார் தயாரித்த இந்தப் படம் வரவேற்பைப் பெற்றதை அடுத்து, ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது.

அதில் சுவாசிகா விஜய் கூறும்போது, “தமிழில் 6 வருடத்துக்கு முன் முதல் படம் பண்ணினேன். அப்போது பல கனவுகளுடன் இங்கே வந்தேன். ஆனால் எதுவும் நடக்கவில்லை. கேரளாவுக்குத் திரும்பிவிட்டேன். இத்தனை வருடங்களுக்குப் பிறகு தமிழில் எனக்கு கம்பேக் படமாக இது அமைந்ததில் சந்தோஷம். இரண்டாவது இன்னிங்ஸ் போல இதை உணர்கிறேன். தயாரிப்பாளர், இயக்குநர் யாருக்கும் என்னைப் பற்றி அவ்வளவாகத் தெரியாது. ஆனாலும் எப்படி என்னை நம்பி இந்த கதாபாத்திரத்தைக் கொடுத்தார்கள் என்று தெரியவில்லை. 16 வயதில் உடைந்து போன அந்தகனவு, இப்போது மீண்டும் நனவாகத் தொடங்கியுள்ளது. இன்னும் நிறைய தமிழ்ப் படங்களில் நடிக்க வேண்டும். தினேஷுடன் ஏற்கனவே ‘குக்கூ’ படத்தில் இணைந்து நடிக்க வேண்டியது, சில காரணங்களால்அது நடக்கவில்லை. இத்தனை வருடங்கள் கழித்து அவரது ஜோடியாக நடித்துள்ளேன். அதுவும் மகிழ்ச்சி” என்றார். படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here