குமரி மக்கள் குறைதீர் கூட்டத்தில் பெறப்பட்ட 285 மனுக்கள்

0
160

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், கல்வி உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம், மாற்றுத்திறனாளி நல உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, குடிநீர், சாலை வசதி, கலைஞர் மகளிர் தொகை போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி பொதுமக்களிடமிருந்து 285 மனுக்கள் பெறப்பட்டன. பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து தீர்வு காணுமாறு துறை சார்ந்த அலுவலர்களுக்கு கலெக்டர் அழகுமீனா அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர், தனித் துணை கலெக்டர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here