கன்னியாகுமரி மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்திற்காக திருவாரூரிலிருந்து நாகர்கோவிலுக்கு 2500 டன் ரேசன் அரிசி சரக்கு ரயில் மூலம் நேற்று வந்தது. அரிசி மூட்டைகள் லாரிகளில் ஏற்றி கோணத்தில் உள்ள நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. தேவைக்கேற்ப நியாய விலை கடைகளுக்கு இவை அங்கிருந்து அனுப்பி வைக்கப்படும் என தகவல் கிடைத்துள்ளது.