Home 2024
Yearly Archives: 2024
மாணவி வன்கொடுமை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணை தொடங்கியது
மாணவி வன்கொடுமை விவகாரம் தொடர்பாக 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு விசாரணையை தொடங்கியுள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பொறியியல் மாணவி கடந்த 23-ம் தேதி இரவு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இதுகுறித்து விசாரிக்க, உயர் நீதிமன்ற உத்தரவின்பேரில், காவல் துணை ஆணையர்கள் சினேக பிரியா (சென்னை அண்ணா நகர்), ஐமான் ஜமால் (ஆவடி), பிருந்தா (சேலம்) ஆகிய 3 ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோட்டூர்புரம் மகளிர் காவல் நிலைய போலீஸார் பதிவு...
தெற்கு ரயில்வேயில் ஜனவரி 1 முதல் 296 பாசஞ்சர் ரயில்களின் எண்கள் மாற்றம்
கரோனா பரவலின்போது பாசஞ்சர் ரயில்களுக்கு பூஜ்ஜியத்தில் தொடங்கும் எண் வழங்கப்பட்ட நிலையில், தற்போது அவை வழக்கமான ரயில் எண்களாக மாற்றப்பட உள்ளன. அந்த வகையில் தெற்கு ரயில்வேயில் 296 பாசஞ்சர் ரயில்களின் எண்கள் ஜனவரி 1-ம் தேதி முதல் மாற்றப்படுகின்றன.
நாட்டில் பல்வேறு மாநிலங்களில் உள்ள கிராமங்கள், சிறு நகரங்களை இணைக்கும் முக்கிய போக்குவரத்து சாதனமாக பாசஞ்சர் ரயில்கள் உள்ளன. தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட சென்னை, திருச்சி, மதுரை, சேலம், பாலக்காடு, திருவனந்தபுரம் ஆகிய 6 கோட்டங்களில் 300-க்கும் மேற்பட்ட பாசஞ்சர் ரயில்கள் ஓடுகின்றன.
இந்த...
தமிழக பொதுப்பணி துறை சார்பில் குடியரசு தின விழா முன்னேற்பாடுகள் தொடக்கம்
ஜனவரி 26-ம் தேதி நடைபெற உள்ள குடியரசு தின விழாவுக்கான முன்னேற்பாடுகளை தமிழக பொதுப்பணி துறை தொடங்கியுள்ளது. குடியரசு தின விழா ஜனவரி 26-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. சென்னையில் மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உழைப்பாளர் சிலை அருகே விழா நடைபெறும். போக்குவரத்து காவல் படையினரின் வாகன அணிவகுப்புடன் முதல்வரும், அவரை தொடர்ந்து ராணுவ வாகன அணிவகுப்புடன் ஆளுநரும் விழா நடைபெறும் இடத்துக்கு வருவார்கள்.
இதையடுத்து, தேசியக் கொடியை ஆளுநர் ஏற்றிவைத்து மரியாதை செலுத்துவார். அப்போது தேசிய கீதம் இசைக்க, ஹெலிகாப்டரில் இருந்து...
பிறவியிலேயே காது கேளாத குழந்தைகளுக்கு ‘காக்ளியர் இம்ப்ளான்ட்’ கருவி இலவசமாக பொருத்தப்படுகிறது
தமிழகத்தில் பிறவிலேயே காது கேளாத குழந்தைகளை கண்டறிந்து இலவசமாக காக்ளியர் இம்ப்ளான்ட் கருவி பொருத்தப்படுகிறது என்று சுகாதாரத்துறை செயலாளர் சுப்ரியா சாஹு தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் பிறவிலேயே காது கேளாமையால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு அரசு மருத்துவமனைகளில், ‘காக்ளியர் இன்ப்ளான்ட்’ கருவி பொருத்தப்படுகிறது. பிறவிலேயே காது கேளாமை பாதிப்பால் 1,000-க்கு 7 குழந்தைகள் பாதிக்கப்படுகின்றன. இவை பிறக்கும்போதே கண்டறியப்படவில்லை என்றால், நிரந்தரமாக பாதிக்கப்படுவதுடன், ஒலி உலகத்தை அனுபவிக்கும் திறனும் இல்லாமல் போய்விடும்.
இந்தாண்டு ஏப்ரல் முதல் நவம்பர் வரை அதிநவீன கருவிகளை...
ஐஏஎஸ் அதிகாரிகள் 5 பேருக்கு முதன்மை செயலர்களாக பதவி உயர்வு
தமிழக பிரிவைச் சேர்ந்த 5 ஐஏஎஸ் அதிகாரிகள் முதன்மைச் செயலர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
இதுகுறித்து அரசு தலைமைச் செயலர் நா.முருகானந்தம் நேற்றிரவு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை ஆணையர் டி.என்.வெங்கடேஷ், முதல்வரின் முதல்நிலை செயலர் பி.உமாநாத், டெல்லியில் உள்ள தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவன செயல் இயக்குநர் ராஜேந்திர ரத்னு, உணவு பாதுகாப்பு ஆணையர் ஆர்.லால்வேனா, தமிழக ஆளுநரின் செயலர் ஆர்.கிர்லோஷ்குமார் ஆகியோர் முதன்மைச் செயலர் அந்தஸ்தில் பதவி உயர்வு பெற்றுள்ளனர். இந்த 5 ஐஏஎஸ் அதிகாரிகளும் 2001-ம் ஆண்டு...
விதிகளை மீறி செயல்படுவதாக புகார்: மாநகராட்சி கவுன்சிலர்கள் 4 பேருக்கு நோட்டீஸ்
சென்னை மாநகாரட்சியில் அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில், விதிகளை மீறி செயல்படுவதாக கூறி மேலும் 4 கவுன்சிலர்களிடம் விளக்கம் கேட்டு நகராட்சி நிர்வாகத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சென்னை மாநகராட்சியில் 2022-ம் ஆண்டு தேர்தல் நடத்தப்பட்டு கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களில் 3 பேர் இறந்துவிட்ட நிலையில், தற்போது 197 கவுன்சிலர்கள் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர், மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்படும் சாலை பணிகள், மழைநீர் வடிகால் பணிகள், கால்வாய் பணிகள், மின் கேபிள் பதிப்பு போன்ற திட்டப் பணிகளை மேற்பார்வையிடுவதில்லை. மக்கள் புகார்களை அலட்சியப்படுத்துகின்றனர் எனவும் குற்றச்சாட்டு...
பேருந்துகளில் காவல்துறையினருக்கு கட்டணமில்லா பயணம்: ஓட்டுநர், நடத்துநர்களுக்கு வழிகாட்டுதல் வெளியீடு
அரசு பேருந்துகளில் காவல்துறையினருக்கு கட்டணமில்லா பயணம் வழங்குவது தொடர்பாக ஓட்டுநர், நடத்துநர்களுக்கு வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது. அரசு பேருந்தில் கட்டணமில்லா பயணம் தொடர்பாக கடந்த மே மாதம் நடத்துநருடன் காவலர் வாக்குவாதத்தில் ஈடுபடும் காணொலி வைரலானது.
இதையடுத்து, முதல்வரின் அறிவிப்புபடி காவலர்களுக்கு கட்டணமில்லா பயணம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இதையொட்டி, காவலர்களின் கட்டணமில்லா பயணம் தொடர்பாக ஓட்டுநர், நடத்துநர்களுக்கு போக்குவரத்துத் துறை சில வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.
அதில் கூறியிருப்பதாவது: அரசு போக்குவரத்துக் கழகங்களில் இயங்கும் நகர், புறநகர் பேருந்துகளில் (ஏசி தவிர்த்து) காவலர்கள் பணி செய்யும் மாவட்டத்துக்குள்...
1363 பேருந்து நிறுத்தங்களில் இன்று தீவிர தூய்மை பணி: 15 மண்டலங்களிலும் ஒரே நேரத்தில் நடைபெறுகிறது
சென்னை மாநகரப் பகுதிகளில் உள்ள 1,363 பேருந்து நிறுத்தங்களில் மாநகராட்சி சார்பில் இன்று தீவிர தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு, நாள்தோறும் சராசரியாக 5,900 டன் திடக்கழிவுகள் அகற்றப்பட்டு வருகிறது. தீவிரத் தூய்மைப் பணியின் கீழ், மாநகராட்சிப் பகுதிகளில் குப்பைகள், கட்டிடக் கழிவுகள், சாலையோரங்கள் மற்றும் சாலை மையத் தடுப்புகளில் உள்ள மண் மற்றும் குப்பைகளை அகற்றுதல், நீர்நிலைகள் மற்றும் கால்வாய்களில் வண்டல்கள் தூர்வாரும் பணிகள்,...
அண்ணா பல்கலை. வளாகத்தில் மாணவிகள் பாதுகாப்புக்கு சிறப்பு குழு அமைப்பு
அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிகளின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக 16 பெண் பேராசிரியர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், வளாகத்தில் புதிதாக 30 சிசிடிவி கேமிராக்கள் அமைக்கப்பட்டு, கூடுதலாக 40 பாதுகாவலர்களும் நியமிக்கப்பட உள்ளனர்.
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் வெளியாகி சர்ச்சையானதால் அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுவருகின்றன. அதன்படி பல்கலைக்கழக வளாகத்தில் தற்போது வெளியாட்கள்...
அதிமுக ஒட்டிய ‘யார் அந்த சார்?’ போஸ்டரால் பரபரப்பு
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் 'யார் அந்த சார்?' என போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஞானசேகரன் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இதுதொடர்பாக அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, 'மாணவியிடம் பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்தபோது, ஞானசேகரன் செல்போனுக்கு அழைப்பு வந்ததாகவும், அவர் ஒருவரிடம் சார் சார் என்று பேசியதாகவும்' அந்த மாணவி புகாரில் தெரிவித்துள்ளார்.
அந்த...














