Home 2024
Yearly Archives: 2024
உலகின் அதிவேக ரயிலை அறிமுகம் செய்தது சீனா: மணிக்கு 450 கி.மீ. பயணித்து சாதனை
மணிக்கு 450 கி.மீ. வேகத்தில் பயணிக்கும் வகையிலான உலகின் அதிவேக ரயிலை சீனா அறிமுகம் செய்துள்ளது.
இந்த வகை ரயில்களுக்கு மேம்படுத்தப்பட்ட ‘சிஆா்450’ புல்லட் ரயில் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த புல்லட் ரயிலானது நவீன தொழில்நுட்பங்களுடன் மிகச் சிறந்த முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனால் நகரங்களுக்கு இடையிலான பயண நேரம் வெகுவாக குறையும் என சீனா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சீன ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: உலகின் அதிவேக ரயிலை சீனா அறிமுகம் செய்துள்ளது. இந்த வகை ரயிலானது, சோதனை ஓட்டத்தின்போது மணிக்கு 450 கி.மீ....
2024-ல் நடந்த 10 பேரிடர் சம்பவங்களில் 2 ஆயிரம் பேர் உயிரிழப்பு: ஆய்வறிக்கையில் தகவல்
2024-ம் ஆண்டில் உலகில் நடந்த 10 பேரிடர் சம்பவங்களில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 288 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்று ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அமெரிக்காவைச் சேர்ந்த கிறிஸ்டியன் எய்ட் என்ற அரசு சாரா அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: பருவநிலை மாற்றங்களால் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பேரழிவுகள் ஏற்படுகின்றன. பேரழிவுகள் காரணமாக ஒரு நாட்டில் ஏற்படும் பொருளாதார தாக்கம், மனித உயிரிழப்புகள் குறித்த தகவல்களை கிறிஸ்டியன் எய்ட் அமைப்பு சேகரித்து வருகிறது.
2024-ம் ஆண்டில்...
கிரிமினல்கள் அச்சுறுத்தலில் சிக்கிய ஒரு குட்டி தீவு தேசம்: அவசர நிலை பிறப்பித்த பிரதமர்!
ஒரு குட்டி தீவு தேசத்தில் கிரிமினல்களின் அட்டூழியத்தால் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. நம் ஊரில் சினிமா கதைக் களமாக இருக்கும் ’கேங் ஊர்’ ஒரு நாட்டையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது.
தென் அமெரிக்கக் கண்டத்தில் இரு தீவுகளைக் கொண்ட நாடு டிரினிடாட் மற்றும் டொபாகோ குடியரசு. இத்தீவுகளில் ஆரம்பத்தில், அமெரிக்கப் பழங்குடியினர் வசித்தனர். ஐரோப்பியர்களின் ஆதிக்கத்துக்குள் இந்த நாடு வந்தபோது, இங்கு வேலை செய்வதற்காக ஆப்பிரிக்க, சீன, போர்த்துக்கீசிய, இந்திய நாடுகளில் இருந்து மக்கள் கொண்டுவரப்பட்டனர்.
1820-களில் இந்தியர்களை ஏமாற்றி வெளிநாட்டு வேலைகளுக்கு அழைத்துச் செல்வது பெரும்...
போபால் யூனியன் கார்பைட் நச்சுக்கழிவு: நீதிமன்ற உத்தரவின் பேரில் 40 ஆண்டுக்குப் பின்னர் அகற்ற முடிவு
போபால் யூனியன் கார்பைட் நச்சுக்கழிவுகளை, நீதிமன்ற உத்தரவின் பேரில் 40 ஆண்டுகளுக்குப் பின்னர் அகற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
மத்தியபிரதேச மாநிலம் போபாலில் அமைக்கப்பட்டிருந்த யூனியன் கார்பைட் நிறுவனத்தில் 1984-ல் நச்சு வாயுக்கசிவு ஏற்பட்டது. இந்த நச்சுக்கசிவின் காரணமாக போபாலில் 5,479 பேர் உயிரிழந்தனர். இந்த துயரச் சம்பவத்தால் அங்கிருந்த மக்கள் வெளியேற்றப்பட்டனர். அதன் பாதிப்பு அப்பகுதியில் இன்னும் இருப்பதாக மக்கள் அச்சம் கொள்கின்றனர்.
இந்நிலையில் யூனியன் கார்பைட் பூச்சிக் கொல்லி தொழிற்சாலையில் 377 மெட்ரிக் டன் எடையுடைய பயங்கரமான நச்சுக்கழிவுகள் அகற்றப்படாமல் உள்ளன. அதை அகற்றுமாறு...
தீவிரவாத செயல் பற்றி திட்டமிடுவதும் தீவிரவாதமே: டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு
ஒரு தீவிரவாத செயலை பல ஆண்டுகளாக திட்டமிட்டு, அதை செயல்படுத்தாமல் இருந்தாலும் அது தீவிரவாதமே என்று டெல்லி உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட்டதற்கு எதிராக அல்-காய்தா உறுப்பினர் ஒருவர் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை டெல்லி உயர் நீதிமன்ற அமர்வு விசாரித்து வந்தது. இந்த வழக்கில் நீதிபதிகள் பிரதிபா எம். சிங், அமித் சர்மா ஆகியோரை கொண்ட அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்த தீர்ப்பில், "சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் பிரிவு 15-ன்படி தீவிரவாத செயல் என்பதற்காக வரையறை, தீவிரவாத...
கேரளாவில் 15 அடி உயர மேடையில் இருந்து தவறி விழுந்த பெண் எம்எல்ஏ படுகாயம்
கேரளாவின் கொச்சி நகரில் 15 அடி உயர மேடையில் இருந்து தவறி விழுந்த பெண் எம்எல்ஏ உமா தாமஸ் படுகாயம் அடைந்தார்.
கேரளாவின் கொச்சி நகரில் உள்ள ஜவஹர்லால் நேரு அரங்கத்தில் கின்னஸ் சாதனை பரத நாட்டிய நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதன்படி சுமார் 12,000-க்கும் மேற்பட்ட பரத நாட்டிய கலைஞர்கள் நேற்று முன்தினம் நடனம் ஆட இருந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் திருக்காட்கரை தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ உமா தாமஸ் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். விஐபிக்களுக்காக சுமார் 15 அடி உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக...
ஆங்கிலப் புத்தாண்டை முஸ்லிம்கள் கொண்டாடுவது தவறு: உத்தரபிரதேச உலாமா ஃபத்வா
ஆங்கிலப் புத்தாண்டை முஸ்லிம்கள் கொண்டாடுவது தவறு என அகில இந்திய முஸ்லிம் ஜமாத்தின் தலைவர் மவுலானா முப்தி ஷகாபுத்தீன் ரிஜ்வீ கூறியுள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் பரேலியின் உலாமாவாகவும் இருக்கும் இவர், ஷரீயத் சட்டத்தை ஆராய்ந்து ஃபத்வாக்களையும் வெளியிட்டு வருகிறார்.
2025 ஆங்கிலப் புத்தாண்டை கொண்டாட இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் தயாராகி வரும் வேளையில், இவரிடம் முஸ்லிம்கள் ஆங்கிலப் புத்தாண்டை கொண்டாடலாமா என விளக்கம் கேட்டுள்ளனர்.
இதற்கு ஷரீயத் முறைப்படி அவர் சட்டவிளக்கம் அளித்துள்ளார். ரிஜ்வீ தனது ஃபத்வாவில், "ஜனவரி 1-ல் வரும் புத்தாண்டு, பிரிட்டிஷ் மற்றும்...
கேரள செவிலி நிமிஷா பிரியாவின் மரண தண்டனையை நிறைவேற்ற ஏமன் அதிபர் உத்தரவு
கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கேரள செவிலி நிமிஷா பிரியாவின் மரண தண்டனையை நிறைவேற்ற அந்நாட்டு அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
ஏமன் நாட்டுக்கு பணிக்குச் சென்ற கேரள செவிலி நிமிஷா பிரியா கடந்த 2017-ஆம் ஆண்டு அந்நாட்டுப் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். அந்நாட்டைச் சேர்ந்தவர் ஒருவரை கொலை செய்துவிட்டார் என்பதே அவர் மீதான குற்றச்சாட்டு. கொலைக் குற்றத்துக்காக கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் சிறையில் இருக்கும் அவர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. அந்தச் செவிலியின் தாய்...
தெற்கு ரயில்வேயில் புதிய கால அட்டவணை நாளைமுதல் அமல்
தெற்கு ரயில்வேயின் புதிய கால அட்டவணை நாளை (ஜன.1) வெளியாகவுள்ள நிலையில் புதிய ரயில்கள், ரயில்களின் சேவை நீட்டிப்பு, வேகம் அதிகரிப்பு உள்ளிட்ட சிறப்பம்சங்கள் அதில் இடம்பெற்றுள்ளன.
ரயில்வேயில் ஆண்டுதோறும் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் விரைவு மற்றும் பயணிகள் ரயில்களுக்கான புதிய கால அட்டவணை வெளியிடப்படும். இந்நிலையில், 2024-ம் ஆண்டுக்கான ரயில்வே புதிய காலஅட்டவணை சில காரணங்களால் தள்ளிவைக்கப்பட்டு, 2025-ம் ஆண்டு ஜன.1-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தெற்கு ரயில்வே புதிய கால அட்டவணை நாளை (ஜன.1) வெளியாகவுள்ளது. இதில் புதிய...
சென்னை ரயில்வே கோட்ட ரயில் நிலையங்களில் மார்ச் மாதத்துக்குள் ‘சிசிடிவி’ பொருத்த நடவடிக்கை
சென்னை ரயில்வே கோட்டத்தில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் ‘சிசிடிவி’ கேமராக்கள் பொருத்தும் பணி வரும் மார்ச் மாதத்துக்குள் முடிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை ரயில்வே கோட்டத்தில் மொத்தம் 160 ரயில் நிலையங்கள் உள்ளன. இவற்றில் சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் உள்பட முக்கிய ரயில் நிலையங்கள் ஒவ்வொன்றிலும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், 50-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், ஆர்.பி.எஃப் படையினர், தமிழக ரயில்வே போலீஸார் ஆகியோர் இணைந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக, பெண் பயணிகள் பாதுகாப்பான...














