Google search engine
Home 2024

Yearly Archives: 2024

சென்னையின் சாலை கட்டமைப்பு குறித்து அதிகாரிகளுடன் உதயநிதி ஆலோசனை

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பேருந்து போக்குவரத்து சாலைகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்துவது மற்றும் புதிய மேம்பாலங்கள் அமைப்பது குறித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நேற்று ஆலோசனை நடைபெற்றது. இக்கூட்டத்தில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம், சென்னை மாநகராட்சி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம் உள்ளிட்ட துறை அதிகாரிகள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில், துணை...

நாட்டின் பாதுகாப்பில் முன்னிலை வகிக்கும் சீக்கியர்கள்: ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம் 

நாட்டில் சீக்கியர்கள் சிறுபான்மையினராக இருந்தாலும், மக்கள் சேவை, நாட்டின் பாதுகாப்பில் முன்னிலை யில் இருப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம் சூட்டியுள்ளார். சீக்கிய மதத்தை தோற்று வித்த குருநானக்கின் 555-வது ஜெயந்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, சென்னை தியாகராய நகரில் உள்ள ஸ்ரீகுருநானக் சத்சங்க சபாவில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, அவரது மகன் ராகுல் ரவி, தென் இந்திய பகுதிகளுக்கான தலைமை படை தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் கரண்பீர் சிங் பிரார் ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர், ஆளுநர் ரவி பேசியதாவது:...

நானே தலைவர்… நானே முதல்வர்! – ரங்கசாமியின் 13 வருட அரசியல் பாணி!

இப்பொதெல்லாம் கட்சி தொடங்கும் முன்பே பதவிகளுக்கு ஆட்கள் வந்துவிடுகிறார்கள். ஆனால், புதுச்சேரியில் கட்சி தொடங்கி வருஷம் 13 ஆகியும் இன்னமும் கட்சிப் பதவிகளுக்கு பொறுப்பாளர்கள் நியமிக்கப்படவில்லை. ஆளும் என்.ஆர். காங்கிரஸ் கட்சி தான் இந்த சரித்திர சாதனையை படைத்துக் கொண்டிருக்கிறது. புதுச்சேரியில் தேர்தலுக்குத் தேர்தல் கட்சி தாவுவோர் எண்ணிக்கை கின்னஸ் லெவல். முன்பெல்லாம் இங்கு தேசியக் கட்சிகளின் ஆதிக்கம் தான் இருக்கும். ஆனால், அதை உடைத்து மாநிலக் கட்சிகளும் ஆட்சியை பிடிக்க முடியும் என்று வெற்றிக்கொடி நட்டவர் ரங்கசாமி. காங்கிரஸ் முதல்வராக இருந்து நீக்கப்பட்ட...

மார்த்தாண்டம்: சாலைக்கு  பாடை கட்டி பாஜக போராட்டம்

நாகர்கோவில் - திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலை குண்டும் குண்டும் குழியுமாக குளம்போல் காட்சியளிக்கிறது. இந்த சாலையை செப்பனிட 19 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் அறிவித்தும் பணிகள் துவங்காத காரணத்தால் பல விபத்துக்கள் தொடர்கதையாகி வருவதை கண்டித்து குழித்துறை நகர பாஜக சார்பாக மார்தாண்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், சட்டமன்ற உறுப்பினர் தாரகை கட்பட் மற்றும் தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மற்றும் மாநில அரசை கண்டித்து குழித்துறை நகர பாஜகவினர் பாடை கட்டி அஞ்சலி செலுத்தும் போராட்டத்தில்...

பத்துகாணி: அரசு பள்ளி வளாகத்தில் புலி? கேமரா கண்காணிப்பு

அருமனை அருகே பத்துகணி பகுதியில் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி மலைப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. நேற்று முன்தினம் (நவம்பர் 13) இரவு பள்ளியில் புலி நடமாடியதற்கான அறிகுறிகள் தெரிந்தன. நள்ளிரவில் பயங்கரமான சத்தம் கேட்டதாகவும், பள்ளி வளாகத்தில் சுற்றித்திரிந்த இரண்டு நாய்களை மர்ம விலங்கு கவர்ந்துசென்றதாகவும் அப்பகுதி வாசிகள் கூறியுள்ளனர். மேலும் பள்ளி வளாகத்தில் புலியின் கால் தடங்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இதுதொடர்பாக அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்....

குழித்துறை: ரயிலில் தவறவிட்ட நகைகள் உரியவரிடம் ஒப்படைப்பு

சென்னை தாம்பரம் பகுதியில் வசித்து வருபவர் டாக்டர் லதா ஜானகி (64). இவர் நேற்று(நவம்பர் 14)  காலை அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னையிலிருந்து திருநெல்வேலி வந்தார். ரயிலில் இருந்து இறங்கும்போது அவர் தனது கைப்பையை எடுக்க மறந்து விட்டார். இது பற்றி உடனடியாக அவர் ரயில்வே அவசர உதவி எண்ணில் போலீசருக்கு தெரிவித்துள்ளார்.  தவறவிட்ட கைப்பையில் சுமார் ஏழு பவுன் மதிப்புள்ள இரு தங்கச் சங்கிலிகள், 2 கிராம் தங்க நாணயம், செல்போன், ரொக்கமாக 25 ஆயிரத்து 714 ரூபாய், ஏடிஎம் கார்டு, ஐடி...

அழகியமண்டபம்: சாலை சீரமைக்கக் கோரி காங்கிரஸ் கட்சியினர் மறியல்

தக்கலை அருகே உள்ள அழகிய மண்டபத்திலிருந்து வேர் கிளம்பி செல்லும் சாலை பொதுமக்கள் பயணம் செய்ய முடியாத அளவுக்கு மிக மோசமான நிலையில் உள்ளது. தற்போது குடிநீர் திட்டங்களுக்கு குழாய் பதிக்க மேலும் தோண்டப்பட்டதால் மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. மேலும் தற்போது தொடர் மழை என்பதால் சாலையில் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. இந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தி கடமலைக்குன்று பகுதியில் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டு, நேற்று (14-ம் தேதி) மாலை 5 மணிக்கு ஆர்ப்பாட்டம் தொடங்கியது.  அப்போது மேகமண்டபம் நோக்கி...

குளச்சல்: மின்னல் தாக்கி கடலில் தூக்கி வீசப்பட்ட மீனவர் மாயம்

குளச்சல் அருகே கோடிமுனை மீனவர் கிராமத்தை சேர்ந்தவர் ஆரோக்கிய ஜூடின் (48). மீனவரான இவர் வழக்கம் போல் நேற்று முன்தினம்(நவம்பர் 13) மாலை தனது வள்ளத்தில் மீன் பிடிக்க சென்றார். இரவு 7 மணி அளவில் இனையம் கடல் பகுதியில் 3 கிலோமீட்டர் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது திடீரென இடி மின்னல் ஏற்பட்டது. அப்போது மனைவியிடம் பேசி செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். பின்னர் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.  இதனால் பதட்டம் அடைந்த உறவினர்கள் மற்றும் மீனவர்கள் வள்ளங்களில் நேற்று (14-ம்...

‘கடவுளே… அஜித்தே…’ – தெறிக்கவிடும் ‘தல’ ரசிகர்கள்!

அஜித் படங்களுக்கு ‘அப்டேட்’ கேட்டு அலப்பறையைக் கொடுப்பதில் அவரது ரசிகர்களை அடிச்சுக்க முடியாது. அந்த வகையில் தற்போது ‘விடாமுயற்சி’ படத்துக்காக புது ஸ்டைலை அவர்கள் பின்பற்றத் தொடங்கியிருக்கிறார்கள். தியேட்டர்களிலும் பொது நிகழ்ச்சிகளிலும் சம்பந்தமே இல்லாமல் ‘கடவுளே அஜித்தே…’ எனக் கும்பலாகக் கூச்சலிட்டு பார்வையாளர்களை ‘ஜர்க்’ ஆக்கி வருவதுதான் அந்த புது பாணி. இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் பலரும் புலம்புகிறார்கள். ‘விடாமுயற்சி’ படத்தின் ‘ஃபர்ஸ்ட் லுக்’ போஸ்டர் மட்டுமே வெளியாகியுள்ளதால் படத்தின் ‘அப்டேட்’டை தெரிந்துகொள்ள அஜித் ரசிகர்கள் பயன்படுத்தும் கவன ஈர்ப்பு மந்திரம்தான், இந்தக்...

ஜப்பான் பாட்மிண்டன் தொடர்: 2-வது சுற்றில் பி.வி.சிந்து தோல்வி

ஜப்பானின் குமாமோட்டோ நகரில் குமாமோட்டோ மாஸ்டர்ஸ் ஜப்பான் பாட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான ஒற்றையர் 2-வது சுற்றில் தரவரிசையில் 20-வது இடத்தில் உள்ள இந்தியாவின் பி.வி.சிந்து, 23-ம் நிலை வீராங்கனையான கடனாவின் மிச்செல் லியை எதிர்த்து விளையாடினார். இதில் சிந்து 21-17, 16-21, 17-21 என்ற செட் கணக்கில் போராடி தோல்வி அடைந்தார்.

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

தமிழ்நாடு தேர்தல் 2026: நாகர்கோவில் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்

நாகர்கோவில் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்: கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள நாகர்கோவில், தமிழக சட்டமன்றத்தின் 230வது தொகுதியாகும். நாகர்கோவில் மாநகராட்சி முழுமையாக இத்தொகுதியில் அடங்கும். வடிவீசுவரம், வடசேரி நீண்டகரை - ஏ, நீண்டகரை - பி, வேம்பனூர்...

கருணாஸ், நிமிஷா சஜயனின் ‘என்ன விலை’

கருணாஸ், நிமிஷா சஜயன் நடிப்​பில் உரு​வாகி​யுள்ள படம் ‘என்ன விலை’. சஜீவ் பழூர் இயக்​கி​யுள்ள இதில் ஒய்​.ஜி. மகேந்​திரா, பூர்​ணிமா பாக்​ய​ராஜ், மோகன் ராம், லொள்ளு சபா சுவாமி​நாதன், கவி​தாலயா கிருஷ்ணன், தீபா...

பாண்​டி​ராஜ் இயக்​கத்தில் ஜெயராம், ஊர்​வசி

‘தலை​வன் தலை​வி’ படத்​தின் வெற்​றிக்​குப் பிறகு இயக்​குநர் ‘பசங்க’ பாண்​டி​ராஜ் இயக்​கும் படத்​துக்கு ‘பரிமளா அண்ட் கோ’ என்று தலைப்பு வைத்​துள்​ளனர். ஜெய​ராம், ஊர்​வசி, சந்​தோஷ் சோபன், சஞ்​சனா கிருஷ்ண​மூர்த்​தி, சாண்​டி, அனந்​திகா சனில்​கு​மார்...