Google search engine
Home 2024

Yearly Archives: 2024

குமரி: வாக்களிப்பதன் அவசியம் குறித்த கோலப்போட்டி

0
100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்கள், இளைஞர்கள், குறிப்பாக 18 வயது நிரம்பிய முதல் கட்ட வாக்காளர்கள் மத்தியில் பல்வேறு அமைப்பினர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றனர்.  அந்த வகையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்கள் சார்பில் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நேற்று (நவ.,18) விழிப்புணர்வு கோலப்போட்டி நடத்தப்பட்டது. இதனை அதிகாரிகள் பார்வையிட்டனர்.

திருவட்டாறு: ஆபத்து ஏற்படுத்திய இரும்பு பாலம்

பத்மனாபபுரம் தொகுதி திருவட்டார் ஒன்றிய பகுதி அயந்தி என்ற பகுதியில் கோதையார் இடதுகரை சானலின் குறுக்கே பொதுமக்கள் நடந்து செல்வதற்காக ஒரு இரும்பு பாலம் ஒன்று உள்ளது. இந்த இரும்பு பாலம் சேதமடைந்து பல வருடங்கள் ஆகிவிட்டன.  பொதுமக்கள் பல மனுக்கள், பல போராட்டங்கள் நடத்தினும் தமிழ்நாடு அரசும் பொதுப்பணித்துறையும் கண்டுகொள்ளவில்லை. இரண்டு வாரங்களுக்கு முன்பு இந்த பாலத்தின் வழியே நடந்து வந்த வயதான மூதாட்டி பாலத்தில் ஓட்டை வழியே கால் முழுவதும் உள்ளே சென்றது. மூதாட்டி அலறிய சத்தம் கேட்டு பொதுமக்கள் உடனே...

திருத்துவபுரம்: மறைவட்ட மூத்த குடிமக்கள் தின விழா

குழித்துறை மறை மாவட்டத்திற்குட்பட்ட திருத்துவபுரம் மறை வட்டம் பொதுநிலையினர் பணிக்குழு சார்பில் மூத்த குடிமக்கள் தின விழா மேல்புறம் தூய காவல் தூதர்கள் ஆலய வளாகத்தில் நடைபெற்றது.  மறைவட்ட முதன்மை பணியாளர் ஓய்சிலின் சேவியர் தலைமை வகித்தார். மறை மாவட்ட முதன்மை பணியாளர் பெனடிக்ட் முன்னிலை வகித்து பேசினார். திருத்துவபுரம் மறைவட்ட பொது நிலை நற்பணி குழு தலைவர் ஜஸ்டின் ராஜா வரவேற்றார். நிகழ்ச்சியில் நாகர்கோவில் ஸ்கார்ட் கிறிஸ்தவ கல்லூரி முன்னாள் முதல்வர் பேராசிரியர் ஜேம்ஸ் ஆர் டேனியல், குழித்துறை மறைவட்ட அருள் பணி...

அருமனை: ஆட்டை வேட்டையாடிய மர்ம விலங்கு; புலி நடமாட்டமா?

அருமனையில் இருந்து சுமார் பத்து கிலோமீட்டர் தொலைவில் வண்ணாத்திப் பாறை என்ற வனப்பகுதி உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த விஜயகுமார் தனது வீட்டில் ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று இரவு வழக்கம் போல் ஆடுகளை அடைத்து விட்டு சென்றுள்ளார். நள்ளிரவில் ஆட்டுப்பட்டியில் இருந்து திடீரென நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டது. விஜயகுமார் வெளியே வந்து பார்த்தபோது அப்போது பட்டியில் இருந்த ஒரு ஆட்டின் பாதி உடலை மர்ம விலங்கு தின்றுவிட்டது தெரிந்தது. இதை அடுத்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.  இது குறித்து அப்பகுதி மக்கள்...

வெள்ளிச்சந்தை: மகன் தாக்கியதில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

வெள்ளிச்சந்தை அருகே ஆசாரிவிளை பகுதியைச் சேர்ந்தவர் தங்கப்பன் (75). கூலித் தொழிலாளி. இவரது மகன் ராஜேஷ் குமார் (37) என்பவர் திங்கள் சந்தையில் உள்ள ஒரு பூக்கடையில் வேலை செய்து வருகிறார்.  கடந்த சில நாட்களாக ராஜேஷ் குமார் தனது பெற்றோர் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என தகராறு செய்து வந்துள்ளார். கடந்த 4-ம் தேதி ராஜேஷ் குமார் தனது பெற்றோரிடம் தகராறு செய்து தந்தை தங்கப்பனை தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்தவர் குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை...

சிறை வாழ்க்கையை பேசும் ஆர்ஜே பாலாஜியின் ‘சொர்க்கவாசல்’!

ஆர்ஜே பாலாஜி ஹீரோவாக நடித்துள்ள படம், ‘சொர்க்க வாசல்’. இதில் செல்வராகவன், நட்டி, சானியா ஐயப்பன், ஷரஃபுதீன், ஹக்கீம் ஷா, பாலாஜி சக்திவேல், கருணாஸ் உட்பட பலர் நடித்துள்ளனர். சித்தார்த் விஸ்வநாத் இயக்கியுள்ளார். கிறிஸ்டோ சேவியர் இசை அமைத்துள்ளார். பிரின்ஸ் ஆண்டர்சன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரைட் ஸ்டூடியோஸ் மற்றும் திங்க் ஸ்டூடியோஸ் சார்பில் சித்தார்த் ராவ், பல்லவி சிங் தயாரித்துள்ள இந்த படம் வரும் 29-ல் வெளியாகிறது. படம் பற்றி இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் கூறும்போது, “இது உணர்வு கலந்த ஆக்‌ஷன் த்ரில்லர் கதையுடன் உருவாகி...

வில்லன் இல்லாத ஃபேமிலி படம்

உதய் கார்த்திக், சுபிக்‌ஷா ஜோடியாக நடித்துள்ள திரைப்படம் ‘ஃபேமிலி படம்’. விவேக் பிரசன்னா, பார்த்திபன் குமார், ஜா, சந்தோஷ், மோகனசுந்தரம், ஆர்ஜே பிரியங்கா, ஜனனி முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். யுகே கிரியேஷன்ஸ் சார்பில் கே.பாலாஜி தயாரித்துள்ள இந்தப் படத்தை செல்வகுமார் திருமாறன் இயக்கியுள்ளார். மெய்யேந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்தின் பாடல்களுக்கு அனிவீ இசையமைத்துள்ளார். அஜிஷ் பின்னணி இசை அமைத்துள்ளார். இந்தப் படம் பற்றி செல்வகுமார் திருமாறன் கூறும்போது, "ஒரு குடும்பத்தில் மூன்று சகோதரர்கள் இருக்கிறார்கள். அதில் கடைசி சகோதரரின் லட்சியத்தை நிறைவேற்ற ஒட்டுமொத்த குடும்பமே...

நயன்தாரா Vs தனுஷ் | இதுவும் ‘புரொமோஷன்’ தானா கோபால்..?

‘நானும் ரவுடி தான்’ படத்தின் சில காட்சிகளை நயன்தாராவின் வாழ்க்கை வரலாறு ஆவணப் படத்தின் ‘டிரெய்ல’ரில் அனுமதியின்றி சேர்த்தமைக்காக ரூ.10 கோடி நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது தயாரிப்பாளர் தனுஷ் தரப்பு. இதனையொட்டி தனுஷூக்கு எதிராக நயன்தாரா நீண்ட புகார் அறிக்கை ஒன்றைத் தயாரித்து வெளியிட, சமூக வலைதளங்களில் அது பேசுபொருளானது. நயன்தாரா-விக்னேஷ்சிவன் இணை இப்படத்தின் காட்சிகளை, இசையைப் பயன்படுத்த அனுமதி கேட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளாக அனுமதி கொடுக்காமல் இழுத்தடித்த தனுஷ், ரிலீஸ் நேரத்தில் ரூ.10 கோடி கேட்டு ‘ஷாக்’ கொடுத்திருக்கிறார். இதனால் பொங்கி...

ஏடிபி பைனல்ஸ் இறுதிப் போட்டி: சாம்பியன் பட்டம் வென்று ஜன்னிக் சின்னர் சாதனை

ஏடிபி பைனல்ஸ் தொடர் இத்தாலியில் உள்ள துரின் நகரில் நடைபெற்று வந்தது. இதன் இறுதிப் போட்டியில் நேற்று முன்தினம் இரவு முதல் நிலை வீரரான இத்தாலியின் ஜன்னிக் சின்னர், 4-ம் நிலை வீரரான அமெரிக்காவின் டெய்லர் ஃபிரிட்ஸுடன் மோதினார். ஒரு மணி நேரம் 24 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஜன்னிக் சின்னர் 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். இதன் மூலம் ஏடிபி பைனல்ஸ் தொடரின் 55 வருட வரலாற்றில் சாம்பியன் பட்டம் வென்ற முதல்...

விராட் கோலியை முந்தினார் பாபர் அஸம்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணியின் பேட்ஸ்மேனான பாபர் அஸம் 40 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அவர், 37 ரன்களை கடந்த போது சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் 2-வது இடத்தில் இருந்த இந்திய அணியின் விராட் கோலியை (4,188) பின்னுக்குத் தள்ளினார். 30 வயதான பாபர் அஸம் டி20-ல் 119 இன்னிங்ஸில் விளையாடி 4,192 ரன்களை சேர்த்துள்ளார். இந்த வகை சாதனையில் ரோஹித் சர்மா 4,231 ரன்கள் குவித்து முதலிடத்தில் உள்ளார். ரோஹித் சர்மாவின்...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

“வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி” – விஜய்க்கு திரையுலக பிரபலங்கள் வாழ்த்து

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக 105+ தொகுதிகளை வசப்படுத்தி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இரண்டாம் இடத்தில் உள்ள திமுக கூட்டணிக்கு 74 தொகுதிகளும், மூன்றாம் இடத்தில் உள்ள அதிமுக கூட்டணிக்கு 53 தொகுதிகளும்...

“முதல்வரின் தோல்வி மனதை பிசைகிறது” – மாரி செல்வராஜ் வருத்தம்

முதல்வர் ஸ்டாலின் அவர்களின் தோல்வி  மனதை பிசைகிறது என இயக்குநர் மாரி செல்வராஜ் வருத்தம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது: “இந்த தேர்தல் முடிவுகள் நிறைய அதிர்ச்சிகளையும் ஆச்சர்யங்களையும் சில...

கேப்டன்சி ‘சேஞ்ச்’ – ரோஹித், ரிக்கிள்டன் அதிரடியில் மும்பை இந்தியன்ஸ் வெற்றி!

ஹர்திக் பாண்டியா உடல்நலமின்மை என்று கூறப்படுவதன் காரணமாக நேற்றைய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சூரியகுமார் யாதவ் கேப்டன்சிப் பொறுப்பை ஏற்றார். லக்னோவின் 228 ரன்கள் இலக்கை மும்பை இந்தியன்ஸ்...