Home 2024
Yearly Archives: 2024
தெலங்கானா ஏரியில் எஸ்ஐ உட்பட 3 பேர் சடலம் மீட்பு
தெலங்கானா மாநிலம், காமாரெட்டி மாவட்டத்தில் உள்ள பிபி பேட்டை போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றிய சாய்குமார் மற்றும் அதே காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றிய ஸ்ருதி மற்றும் ஒரு கூட்டுறவு சங்கத்தில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணியாற்றும் நிகில் ஆகிய 3 பேரின் செல்போன்களும் திடீரென ஸ்விட்ச் ஆஃப் ஆனதால், அவரவர் வீடுகள் சில மணி நேரம் தேடினர்.
அதன் பின்னர் இது குறித்து பிபி பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். காமாரெட்டி மாவட்ட எஸ்பி சிந்து ஷர்மா இது குறித்து விசாரிக்க தனிப்படை...
குஜராத்தில் போலீஸாரை தாக்கிய புகாரில் காங்கிரஸ் எம்எல்ஏ உட்பட 21 பேர் கைது
குஜராத் மாநிலத்தில் பல்கலைக்கழகத்துக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது போலீஸாரை தாக்கியதாக கூறி காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ உள்ளிட்ட 21 பேரை போலீஸார் கைது செய்தனர்.
மாணவர்கள் விடுதியில் மது பயன்படுத்தப்படுவதாக கூறி ஹேமசந்திரயா நார்த் குஜராத் பல்கலைகழகத்துக்கு (எச்என்ஜியு) எதிராக, படன் சட்டப்பேரவை தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ கிரித் படேல், சித்பூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ சந்தன்ஜித் தாக்கூர், மாணவர் அமைப்பினர் உட்பட 200-க்கும் மேற்பட்டோர் நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தின்போது காங்கிரஸ் கட்சியின் வன்முறையில் ஈடுபட்டதுடன் போலீஸாரையும் தாக்கியதாக கூறி கிரித்...
ஆழ்துளை கிணற்றில் விழுந்த ராஜஸ்தான் சிறுமியை மீட்கும் பணி 5-வது நாளாக தொடர்கிறது
ராஜஸ்தானில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுமியை மீட்க, 70 மணி நேரத்துக்கு மேலாக மீட்பு குழுவினர் போராடி வருகின்றனர்.
ராஜஸ்தான் மாநிலம் கோத்புத்லி -பெஹ்ரோர் மாவட்டம் பதியாலி தானி பகுதியைச் சேர்ந்த 3 வயது சிறுமி சேத்தனா. இவர் கடந்த திங்கள் கிழமை தனது தந்தையின் விவசாய நிலத்தில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு தோண்டி வைக்கப்பட்டிருந்த ஆழ்துளை கிணற்றில் சேத்தனா தவறி விழுந்தார். 150 அடி ஆழத்தில் விழுந்த சிறுமியை மீட்க தேசிய பேரிடர் மற்றும் மாநில பேரிடர் மீட்பு...
சினிமா பிரபலங்களின் பவுன்சர்கள் அத்துமீறி நடந்தால் நடவடிக்கை: தெலங்கானா முதல்வர் எச்சரிக்கை
சினிமா பிரபலங்களின் பவுன்சர்கள் மற்றும் தனியார் மெய்க்காப்பாளர்கள் அத்துமீறி நடந்துகொண்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி எச்சரிக்கை விடுத்தார்.
ஹைதராபாத் சந்தியா திரையரங்கில் புஷ்பா-2 திரைப்படத்தின் சிறப்பு காட்சி கடந்த 4-ம் தேதி இரவு திரையிடப்பட்டது. இதனை காண அப்படத்தின் கதாநாயகன் அல்லு அர்ஜுன் வந்திருந்தார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பாஸ்கர் என்பவரின் மனைவி ரேவதி (35) உயிரிழந்தார். அவரது மகன் ஸ்ரீதேஜ் (9) படுகாயம் அடைந்தார். இது தொடர்பான வழக்கில் நடிகர் அல்லு அர்ஜுன்...
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு: தலைவர்கள் இரங்கல்
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நேற்று காலமானார். அவருக்கு வயது 92. அவரது மறைவுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் உட்பட பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவின் 14-வது பிரதமராக பதவி வகித்த மன்மோகன்சிங் கடந்த 1932 செப்.26-ல் மேற்கு பஞ்சாபில் (தற்போது பாகிஸ்தானில் உள்ளது) பிறந்தவர். காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான இவர் கடந்த 1991-96 நரசிம்மராவ் தலைமையிலான அமைச்சரவையில் நிதி அமைச்சராக பதவி வகித்தார். பொருளாதார வல்லுநரான இவர் இந்தியாவின் பொருளாதார தாராளமயமாக்கல் கொள்கையின் தொடக்கத்துக்கு வித்திட்டவர். ரிசர்வ் வங்கியின் கவர்னராகவும்...
தவெகவுடன் அதிமுக கூட்டணியா? – முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சொல்வது என்ன?
‘தவெகவுடன் கூட்டணி குறித்து இப்போதே எதுவும் சொல்ல முடியாது’ என முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.
திண்டுக்கல்லில் அதிமுக இளைஞர் இளம்பெண்கள் பாசறை சார்பில் உறுப்பினர் சேர்க்கை படிவம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு திண்டுக்கல் மேற்கு மாவட்டச் செயலாளர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, உதயகுமார் ஆகியோர் கலந்துகொண்டு உறுப்பினர் படிவங்களை வழங்கினர். இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாநில செயலாளர் பரமசிவம், முன்னாள் மேயர் மருதராஜ் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் திண்டுக்கல் சீனிவாசன்...
“நான் தனி மனிதனாக வீதிக்கு வந்து பேசினால் வேறுமாதிரி இருக்கும்” – அண்ணாமலை ஆவேசம்!
‘திமுகவை ஆட்சி பொறுப்பில் இருந்து அகற்றும் வரை காலணி அணிய மாட்டேன். என்னை நானே சாட்டையால் அடித்துக் கொள்ளப் போகிறேன்’ என அண்ணாமலை தெரிவித்தார்.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கோவையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: சென்னை அண்ணா பல்கலைக்கழக சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவியின் பெயர், தந்தை பெயர், முகவரி உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் கசிய விட்டதற்கு திமுகவினர் வெட்கப்பட வேண்டும். அண்ணாமலை மீண்டும் திரும்பியுள்ளதால் 3 மாதங்களுக்குப் பின் அமைதிப்பூங்காவாக விளங்கிய தமிழ்நாட்டில் கலவரம் வெடித்துள்ளது என...
முதல் தகவல் அறிக்கையை வெளியிட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை: அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தல்
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் முதல் தகவல் அறிக்கையை வெளியிட்ட காவல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் கூறியிருப்பதாவது:
பாமக தலைவர் அன்புமணி: காவல்துறையின் இந்த பொறுப்பற்ற செயல் கண்டிக்கத்தக்கது. மாணவியை இரக்கமற்ற மனித மிருகம் உடல்ரீதியாக வன்கொடுமை செய்தால், காவல்துறையோ மனரீதியாக வன்கொடுமை செய்திருக்கிறது. பாலியல் வன்கொடுமை சார்ந்த வழக்குகளில் எத்தகைய நடைமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும் என்ற அடிப்படைக் கூட தெரியாத அதிகாரிகளால் கையாளப்படும் இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி...
குமரி முனையில் திருவள்ளுவர் சிலைக்கு வெள்ளிவிழா: ரூ.37 கோடியில் கண்ணாடி இழை பாலத்தை திறக்கிறார் முதல்வர் ஸ்டாலின்
குமரி முனையில் திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழாவை முன்னிட்டு, ரூ.37 கோடியில் வள்ளுவர் சிலை - விவேகானந்தர் பாறை இடையிலான கண்ணாடி இழை பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் டிச.30-ம் தேதி திறந்து வைக்கிறார்.
மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி, கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலையை கடந்த 2000-ம் ஆண்டு ஜன.1-ம் தேதி திறந்து வைத்தார். இந்த சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளன. இதையடுத்து, வரும் டிச.30 முதல் ஜன.1-ம் தேதி வரை 3 நாட்கள் தமிழக அரசின் சார்பில் வெள்ளிவிழா நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது....
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக இன்று ஆர்ப்பாட்டம்
படிப்பு, பணியிடங்களில்கூட பெண்கள் பாதுகாப்பாக இருக்க முடியாத அளவுக்கு தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டுள்ளது என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். தலைநகரின் மையத்தில் உள்ள, மாநிலத்தின் பெருமைமிகு அடையாளங்களில் ஒன்றான அண்ணா பல்கலைக்கழகத்திலேயே மாணவிக்கு இப்படியொரு கொடூரம் நிகழ்ந்திருப்பது வெட்கக்கேடானது. படிப்பு,...














